2025ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கைக்கான திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களுக்கான வகுப்புகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 30ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி 02ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை எதிர்வரும் ஜனவரி 24 ஆம் திகதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை ஆரம்பிக்கும் திகதி - முதலாம் வகுப்புக்கு மாணவர்களை உள்வாங்குதல் பற்றிய அறிவிப்பு 2025ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கைக்கான திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களுக்கான வகுப்புகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 30ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி 02ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை எதிர்வரும் ஜனவரி 24 ஆம் திகதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.