• Jun 24 2024

வடக்கில் ட்ரோன் கமராக்கள் மூலம் காடழிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை ...!

Anaath / Jun 16th 2024, 11:16 am
image

Advertisement

நாட்டில் இடம்பெறும் காடழிப்பினை கண்காணிப்பதற்கு ட்ரோன் கமராக்களை இன்று முதல் பயன்படுத்தவுள்ளதாக வனப்பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த செயற்பாடானது வடக்கில் முல்லைத்தீவு, மன்னர் ஆகிய பிரதேசங்களில் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் மேலும்  இதற்கென  வனவளத்திணைக்களத்தின் விசேட பயிற்சி பெற்ற அதிகாரிகள் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து அதிகளவிலான  சட்டவிரோதமான தேக்க மரங்கள், முதிரைமரங்கள், பாலைமரங்கள் அறுக்கப்பட்டு வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன இதனால் இயற்கை வளமான காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக முறிப்பு, தண்ணி முறிப்பு, கோடாலிக்கல்லு, கரிப்பட்டமுறிப்பு, உடையார் கட்டு, விசுவமடு, மன்னாகண்டல், முத்தையன்கட்டு, நெட்டாங்கண்டல், துணுக்காய், ஜயன்கன்குளம், கொக்காவில், பனிக்கன் குளம், அம்பகாமம், கரிப்பட்டமுறிப்பு, மணவாளன்பட்டமுறிப்பு, மாங்குளம், ஒட்டுசுட்டான் போன்ற பிரதேசங்களில் உள்ள இயற்கை வளமான காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. சட்ட விரோத மரக்கடத்தல் தொடர் பில் பல நூற்றுக்கணக்கான சம்பவங்கள் இடம்பெற்றாலும் சில சம்பவங்களையே பொலிஸார் கண்டுள்ளார்கள்.

பல இடங்களில் பெருமளவான அறுக்கப்பட்ட மரக்குற்றிகள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் வாகனங்களில் கடத்தப்பட்டமை தொடர்பிலும் பல வழக்குகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் பெருமளவான இயற்கை வளத்தினை அழிப்பவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப் பதற்கோ கட்டுப்படு த்தவோ பொலீஸ் நிலையங்களில் ஆளணி பற்றாக்குறை காணப் படுவதுடன் வனவளத்திணைக்களத்திடமும் ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாக சம்பந்தப்பட்ட அதிகாரி கள் தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன் இவற்றை சாதகமாக பயன்ப டுத்தி சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்ச்சியாக காடுகளை அழித்து வருவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வடக்கில் ட்ரோன் கமராக்கள் மூலம் காடழிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை . நாட்டில் இடம்பெறும் காடழிப்பினை கண்காணிப்பதற்கு ட்ரோன் கமராக்களை இன்று முதல் பயன்படுத்தவுள்ளதாக வனப்பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த செயற்பாடானது வடக்கில் முல்லைத்தீவு, மன்னர் ஆகிய பிரதேசங்களில் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் மேலும்  இதற்கென  வனவளத்திணைக்களத்தின் விசேட பயிற்சி பெற்ற அதிகாரிகள் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து அதிகளவிலான  சட்டவிரோதமான தேக்க மரங்கள், முதிரைமரங்கள், பாலைமரங்கள் அறுக்கப்பட்டு வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன இதனால் இயற்கை வளமான காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக முறிப்பு, தண்ணி முறிப்பு, கோடாலிக்கல்லு, கரிப்பட்டமுறிப்பு, உடையார் கட்டு, விசுவமடு, மன்னாகண்டல், முத்தையன்கட்டு, நெட்டாங்கண்டல், துணுக்காய், ஜயன்கன்குளம், கொக்காவில், பனிக்கன் குளம், அம்பகாமம், கரிப்பட்டமுறிப்பு, மணவாளன்பட்டமுறிப்பு, மாங்குளம், ஒட்டுசுட்டான் போன்ற பிரதேசங்களில் உள்ள இயற்கை வளமான காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. சட்ட விரோத மரக்கடத்தல் தொடர் பில் பல நூற்றுக்கணக்கான சம்பவங்கள் இடம்பெற்றாலும் சில சம்பவங்களையே பொலிஸார் கண்டுள்ளார்கள்.பல இடங்களில் பெருமளவான அறுக்கப்பட்ட மரக்குற்றிகள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் வாகனங்களில் கடத்தப்பட்டமை தொடர்பிலும் பல வழக்குகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் பெருமளவான இயற்கை வளத்தினை அழிப்பவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப் பதற்கோ கட்டுப்படு த்தவோ பொலீஸ் நிலையங்களில் ஆளணி பற்றாக்குறை காணப் படுவதுடன் வனவளத்திணைக்களத்திடமும் ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாக சம்பந்தப்பட்ட அதிகாரி கள் தெரிவித்துள்ளார்கள்.அத்துடன் இவற்றை சாதகமாக பயன்ப டுத்தி சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்ச்சியாக காடுகளை அழித்து வருவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement