• Aug 18 2025

சிறுத்தைகளின் நடமாட்டத்தால் தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி

Chithra / Aug 18th 2025, 11:59 am
image


சிறுத்தைகளின் நடமாட்டம் காரணமாக தேயிலை மலைகளில் கொழுந்து பறிக்கும் தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியுள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தங்களது வீடுகளில் செல்லப்பிராணிகளாக வைத்திருக்கும் நாய்களை சிறுத்தைகள் வேட்டையாடும் சம்பவம் தற்போது அதிகரித்துள்ளதாகவும்  தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கினிகத்தேனை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு நாய்களில் ஒன்றை,  சிறுத்தை இழுத்துச் செல்வது அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.

சிறுத்தைகளின் நடமாட்டம் தோட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்துள்ளதன் காரணமாக அச்சம் ஏற்பட்டுள்ளதோடு, நாய்களை வேட்டையாடும் சம்பவம் அதிகரித்து காணப்படுகின்றது. 

எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சிறுத்தைகளின் நடமாட்டத்தால் தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி சிறுத்தைகளின் நடமாட்டம் காரணமாக தேயிலை மலைகளில் கொழுந்து பறிக்கும் தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியுள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் தங்களது வீடுகளில் செல்லப்பிராணிகளாக வைத்திருக்கும் நாய்களை சிறுத்தைகள் வேட்டையாடும் சம்பவம் தற்போது அதிகரித்துள்ளதாகவும்  தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.கினிகத்தேனை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு நாய்களில் ஒன்றை,  சிறுத்தை இழுத்துச் செல்வது அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.சிறுத்தைகளின் நடமாட்டம் தோட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்துள்ளதன் காரணமாக அச்சம் ஏற்பட்டுள்ளதோடு, நாய்களை வேட்டையாடும் சம்பவம் அதிகரித்து காணப்படுகின்றது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement