நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் நேற்றைய மாலைத் திருவிழாவில் முருகன் கைலாசவாகனத்தில் காட்சியளித்துள்ளார்.
நல்லூர்க் கந்தசுவாமி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவ பெருவிழா கடந்த மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
நல்லூரானின் 25 நாள் திருவிழாவில் நேற்று (17) 20 ஆம் நாள் திருவிழா இடம்பெற்றது. 20 ஆம் நாள் திருவிழாவின் மாலைத் திருவிழா பக்தர்களை சிலிர்க்க வைத்தது.
நேற்றைய மாலைத்திருவிழாவில் முருகன் கைலாசவாகனத்தில் பல வண்ண அலங்காரங்களுடன் காட்சியளித்தார்.
கைலாசவாகனத்தில் முருகன் வீதியுலா வந்த காட்சி காண்பவர்களைப் பக்திப் பரவசமடைய வைத்தது.
வழமைக்கு மாறாக நேற்று நல்லூரானைக் கைலாசவாகனத்தில் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு சென்றுள்ளனர்.
தொடர்ச்சியாக இன்றைய 21 ஆம் நாள் மாலை திருவிழாவில் நல்லூரான் தங்கரதத்தில் காட்சியளிக்கவுள்ளார்.
இன்றுமுதல் தங்கரதத் திருவிழா, சப்பறத்திருவிழா, தேர்த்திருவிழா, தீர்த்தத் திருவிழா உள்ளிட்ட விசேட திருவிழாக்கள் இடம்பெறவுள்ளதால் நல்லூர் ஆலய சூழல் பக்தர்களால் நிறைந்து காணப்படும் என்பதில் ஐயமில்லை.
கைலாசவாகனத்தில் காட்சியளித்த கந்தன்; வண்ண அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு அருள் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் நேற்றைய மாலைத் திருவிழாவில் முருகன் கைலாசவாகனத்தில் காட்சியளித்துள்ளார். நல்லூர்க் கந்தசுவாமி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவ பெருவிழா கடந்த மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. நல்லூரானின் 25 நாள் திருவிழாவில் நேற்று (17) 20 ஆம் நாள் திருவிழா இடம்பெற்றது. 20 ஆம் நாள் திருவிழாவின் மாலைத் திருவிழா பக்தர்களை சிலிர்க்க வைத்தது. நேற்றைய மாலைத்திருவிழாவில் முருகன் கைலாசவாகனத்தில் பல வண்ண அலங்காரங்களுடன் காட்சியளித்தார். கைலாசவாகனத்தில் முருகன் வீதியுலா வந்த காட்சி காண்பவர்களைப் பக்திப் பரவசமடைய வைத்தது.வழமைக்கு மாறாக நேற்று நல்லூரானைக் கைலாசவாகனத்தில் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு சென்றுள்ளனர். தொடர்ச்சியாக இன்றைய 21 ஆம் நாள் மாலை திருவிழாவில் நல்லூரான் தங்கரதத்தில் காட்சியளிக்கவுள்ளார். இன்றுமுதல் தங்கரதத் திருவிழா, சப்பறத்திருவிழா, தேர்த்திருவிழா, தீர்த்தத் திருவிழா உள்ளிட்ட விசேட திருவிழாக்கள் இடம்பெறவுள்ளதால் நல்லூர் ஆலய சூழல் பக்தர்களால் நிறைந்து காணப்படும் என்பதில் ஐயமில்லை.