• Aug 18 2025

தபால் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் நியாயமற்றது! - தபால்மா அதிபர் சுட்டிக்காட்டு

Chithra / Aug 18th 2025, 9:02 am
image


தபால் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது நியாயமற்றது என தபால்மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தபால் தொழிற்சங்கள் முன்வைத்துள்ள 19 கோரிக்கைகளில் பல ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளவையாகும். 

அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகவே இந்த வேலை நிறுத்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

நாம் அனைவரும் அரச உத்தியோகத்தர்கள் என்பதால் அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆட்சேர்ப்பு தொடர்பான கோரிக்கையும் இவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு 600 தபால் அதிகாரிகளை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய போட்டிப் பரீட்சைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாண்டு சம்பளம் மற்றும் மேலதிக வேலை நேர கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ள வீதத்தை அடிப்படையாகக் கொண்டு அவதானித்தால் தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்த போராட்டம் நியாயமற்றதாகும். கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

அதற்கமைய குறிப்பிட்ட வழிமுறையொன்றுக்கு இணக்கம் காணப்பட்டு அவர்களால் கையெழுத்திடப்பட்ட கடிதமொன்றும் எம்மிடமுள்ளது. 

அதற்கமைய கைரேகை பதிவிற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். அவ்வாறிருக்கையில் தற்போதும் அதற்கும் எதிர்ப்பினை வெளியிட்டு வேலை நிறுத்தங்களில் ஈடுபடுவது நியாயமற்றது என்றார்.


தபால் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் நியாயமற்றது - தபால்மா அதிபர் சுட்டிக்காட்டு தபால் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது நியாயமற்றது என தபால்மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,தபால் தொழிற்சங்கள் முன்வைத்துள்ள 19 கோரிக்கைகளில் பல ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளவையாகும். அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகவே இந்த வேலை நிறுத்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.நாம் அனைவரும் அரச உத்தியோகத்தர்கள் என்பதால் அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆட்சேர்ப்பு தொடர்பான கோரிக்கையும் இவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.இவ்வாண்டு 600 தபால் அதிகாரிகளை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய போட்டிப் பரீட்சைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இவ்வாண்டு சம்பளம் மற்றும் மேலதிக வேலை நேர கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ள வீதத்தை அடிப்படையாகக் கொண்டு அவதானித்தால் தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்த போராட்டம் நியாயமற்றதாகும். கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.அதற்கமைய குறிப்பிட்ட வழிமுறையொன்றுக்கு இணக்கம் காணப்பட்டு அவர்களால் கையெழுத்திடப்பட்ட கடிதமொன்றும் எம்மிடமுள்ளது. அதற்கமைய கைரேகை பதிவிற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். அவ்வாறிருக்கையில் தற்போதும் அதற்கும் எதிர்ப்பினை வெளியிட்டு வேலை நிறுத்தங்களில் ஈடுபடுவது நியாயமற்றது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement