• May 19 2025

ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளை பிரதேச மட்டத்தில் விஸ்தரிக்க நடவடிக்கை

Chithra / May 18th 2025, 1:47 pm
image

 

ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளை பிரதேச செயலகங்கள் ஊடாக நாடு தழுவிய ரீதியில் விஸ்தரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் இனி வரும் காலங்களில் ஜனாதிபதி நிதியத்தின் கொடுப்பனவுகளை எதிர்பார்க்கும் ​நோயாளிகள், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அதற்கான அதிகாரிகளை சந்தித்து தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்தாலே போதுமானது.

அவ்வாறான விண்ணப்பங்களை இணையத்தளம் வழியாக தரவேற்றுவது, அதனை பொறுப்பெடுத்தது தொடக்கம் அனுமதி அல்லது நிராகரிப்பு வரையான அனைத்துச் செயற்பாடுகள் தொடர்பான பங்களிப்புகள், விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை இணையத்தளம் வழியாக பரீட்சித்தல், 

அனுமதி கிடைத்தவுடன் மருத்துவ உதவித் தொகை வழங்கல் ​போன்ற செயற்பாடுகள் இனி வரும் காலங்களில் பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் பிரதேச செயலக அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அலுவலகத்தின் சார்பில் விசேட பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது.

ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளை பிரதேச மட்டத்தில் விஸ்தரிக்க நடவடிக்கை  ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளை பிரதேச செயலகங்கள் ஊடாக நாடு தழுவிய ரீதியில் விஸ்தரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன் பிரகாரம் இனி வரும் காலங்களில் ஜனாதிபதி நிதியத்தின் கொடுப்பனவுகளை எதிர்பார்க்கும் ​நோயாளிகள், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அதற்கான அதிகாரிகளை சந்தித்து தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்தாலே போதுமானது.அவ்வாறான விண்ணப்பங்களை இணையத்தளம் வழியாக தரவேற்றுவது, அதனை பொறுப்பெடுத்தது தொடக்கம் அனுமதி அல்லது நிராகரிப்பு வரையான அனைத்துச் செயற்பாடுகள் தொடர்பான பங்களிப்புகள், விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை இணையத்தளம் வழியாக பரீட்சித்தல், அனுமதி கிடைத்தவுடன் மருத்துவ உதவித் தொகை வழங்கல் ​போன்ற செயற்பாடுகள் இனி வரும் காலங்களில் பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.இது தொடர்பில் பிரதேச செயலக அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அலுவலகத்தின் சார்பில் விசேட பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement