• Nov 23 2024

எனது ஆட்சியில் அதானியின் காற்றாலை திட்டம் ரத்து செய்யப்படும்! எச்சரிக்கை விடுத்த அநுர

Chithra / Sep 16th 2024, 9:09 am
image

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனது அரசாங்கம் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், இலங்கையில் இந்திய கூட்டு நிறுவனமான அதானியின் 450 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ரத்து செய்யப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த ஒப்பந்தம் ஊழல் நிறைந்தது என்றும், இலங்கையின் நலன்களுக்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை, அதானி நிறுவனத்திடம் இருந்து அலகு ஒன்றுக்கு 0.0826 டொலர் என்ற விகிதத்தில் எரிசக்தியை வாங்குகின்ற அதேசமயம் இலங்கை நிறுவனம் ஒன்று, 0.0488 டொலருக்கு எரிசக்தியை வழங்குகிறது என்று  சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த 2023ஆம் ஆண்டு பெப்ரவரியில், இலங்கையின் முதலீட்டு சபை, அதானி கிரீன் எனர்ஜியின் 442 மில்லியன் டொலர் காற்றாலை மின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, வட இலங்கையில் மன்னார் மற்றும் பூனேரியில் ஆலைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்தத் திட்டம் சட்டரீதியான சவால்களை எதிர்கொண்டுள்ளது. தற்போது உயர்நீதிமன்ற மதிப்பாய்வில் இந்த சவால்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

எனது ஆட்சியில் அதானியின் காற்றாலை திட்டம் ரத்து செய்யப்படும் எச்சரிக்கை விடுத்த அநுர  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனது அரசாங்கம் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், இலங்கையில் இந்திய கூட்டு நிறுவனமான அதானியின் 450 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ரத்து செய்யப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.அத்துடன், இந்த ஒப்பந்தம் ஊழல் நிறைந்தது என்றும், இலங்கையின் நலன்களுக்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.இலங்கை, அதானி நிறுவனத்திடம் இருந்து அலகு ஒன்றுக்கு 0.0826 டொலர் என்ற விகிதத்தில் எரிசக்தியை வாங்குகின்ற அதேசமயம் இலங்கை நிறுவனம் ஒன்று, 0.0488 டொலருக்கு எரிசக்தியை வழங்குகிறது என்று  சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, கடந்த 2023ஆம் ஆண்டு பெப்ரவரியில், இலங்கையின் முதலீட்டு சபை, அதானி கிரீன் எனர்ஜியின் 442 மில்லியன் டொலர் காற்றாலை மின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.இதன்படி, வட இலங்கையில் மன்னார் மற்றும் பூனேரியில் ஆலைகள் திட்டமிடப்பட்டுள்ளன.இந்தத் திட்டம் சட்டரீதியான சவால்களை எதிர்கொண்டுள்ளது. தற்போது உயர்நீதிமன்ற மதிப்பாய்வில் இந்த சவால்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement