கொழும்பு தாமரைக் கோபுரத்தில் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் இருந்து 'விளையாட்டு பாய்ச்சல்' என அழைக்கப்படும் ஒருவகை சாகச விளையாட்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே, தலைநகரம் ஒன்றில் பல வசதிகளை கொண்ட 185 மீற்றர் உயரமான கோபுரத்தில் இருந்து இந்த விளையாட்டினை மேற்கொள்வது இதுவே முதல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றினால் இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் காலத்தில் கோபுரத்துக்கு அருகாமையில் உள்ள பேர ஏரியில், வெளிநாட்டு நீர் விளையாட்டு ஏற்பாட்டாளர்களின் ஒத்துழைப்புடன் பல விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தவிர, வெளிநாட்டு முதலீட்டுடன் 'கெசினோ' நிலையம் ஒன்றும் இந்த கோபுரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்காக பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர் இதுவரை 40 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட பலர் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு தாமரைக் கோபுரத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள சாகச விளையாட்டு கொழும்பு தாமரைக் கோபுரத்தில் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் இருந்து 'விளையாட்டு பாய்ச்சல்' என அழைக்கப்படும் ஒருவகை சாகச விளையாட்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.உலகிலேயே, தலைநகரம் ஒன்றில் பல வசதிகளை கொண்ட 185 மீற்றர் உயரமான கோபுரத்தில் இருந்து இந்த விளையாட்டினை மேற்கொள்வது இதுவே முதல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றினால் இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், எதிர்வரும் காலத்தில் கோபுரத்துக்கு அருகாமையில் உள்ள பேர ஏரியில், வெளிநாட்டு நீர் விளையாட்டு ஏற்பாட்டாளர்களின் ஒத்துழைப்புடன் பல விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இது தவிர, வெளிநாட்டு முதலீட்டுடன் 'கெசினோ' நிலையம் ஒன்றும் இந்த கோபுரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதேவேளை, தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்காக பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர் இதுவரை 40 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட பலர் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.