• May 18 2024

எங்களுடன் இணையுங்கள்..! - வடபகுதி மக்களுக்கு ஜே.வி.பி. தலைவர் அழைப்பு

Chithra / Dec 10th 2023, 3:46 pm
image

Advertisement



எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் நாங்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வோம் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க வடபகுதி மக்களிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

எங்களின் நெருங்கிய அயல்நாடான இந்தியா மிகவும் வலுவான அரசியல் பொருளாதார மையமாக மாறியுள்ளமை எங்களிற்கு தெரியும்.

ஆகவே பொருளாதார அரசியல் முடிவுகளை எடுக்கும்போது அது இந்தியாவை எப்படி பாதிக்கும் என்பது குறித்து நாங்கள் கவனம் செலுத்துவோம். இரண்டு சக்தி வாய்ந்த நாடுகள் மத்தியிலேயே பூகோள அரசியலில் போட்டி காணப்படுகின்றது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இல்லை. இந்த நாட்டில் சில பிரச்சினைகள் உள்ளன என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

குறிப்பாக தமிழர்கள் முஸ்லீம்கள் தொடர்பில் - அவர்களது மொழி கலாச்சார விடயங்கள் மற்றும் ஆட்சி முறையில் பங்கெடுத்தல் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன. இந்த விவகாரங்களிற்கு நாங்கள் தீர்வை காணவேண்டும்.

வடக்கு மக்களிற்கு தேசிய மக்கள் சக்தி விடுக்கின்ற வேண்டுகோள் இதுதான் எங்களுடன் இணையுங்கள் நாங்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வோம்.

ஊழல்மிகுந்த ஆளும்குழுவை தோற்கடிப்பதற்கான தேசிய விடுதலை இயக்கத்திலும் நீங்கள் இணைந்துகொள்ளவேண்டும். என குறிப்பிட்டுள்ளார்.

எங்களுடன் இணையுங்கள். - வடபகுதி மக்களுக்கு ஜே.வி.பி. தலைவர் அழைப்பு எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் நாங்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வோம் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க வடபகுதி மக்களிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களின் நெருங்கிய அயல்நாடான இந்தியா மிகவும் வலுவான அரசியல் பொருளாதார மையமாக மாறியுள்ளமை எங்களிற்கு தெரியும்.ஆகவே பொருளாதார அரசியல் முடிவுகளை எடுக்கும்போது அது இந்தியாவை எப்படி பாதிக்கும் என்பது குறித்து நாங்கள் கவனம் செலுத்துவோம். இரண்டு சக்தி வாய்ந்த நாடுகள் மத்தியிலேயே பூகோள அரசியலில் போட்டி காணப்படுகின்றது.இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இல்லை. இந்த நாட்டில் சில பிரச்சினைகள் உள்ளன என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.குறிப்பாக தமிழர்கள் முஸ்லீம்கள் தொடர்பில் - அவர்களது மொழி கலாச்சார விடயங்கள் மற்றும் ஆட்சி முறையில் பங்கெடுத்தல் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன. இந்த விவகாரங்களிற்கு நாங்கள் தீர்வை காணவேண்டும்.வடக்கு மக்களிற்கு தேசிய மக்கள் சக்தி விடுக்கின்ற வேண்டுகோள் இதுதான் எங்களுடன் இணையுங்கள் நாங்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வோம்.ஊழல்மிகுந்த ஆளும்குழுவை தோற்கடிப்பதற்கான தேசிய விடுதலை இயக்கத்திலும் நீங்கள் இணைந்துகொள்ளவேண்டும். என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement