தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற திருவிழா இன்று ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் ஆரம்பமானது.
வள்ளி அம்மன் வாசலுக்கு எழுந்தருளி வேலவர் வந்ததும் அவரை வள்ளி அம்மன் கோவிலுக்குக் கொண்டு சென்று தீர்த்தக் குளத்தில் நீர் எடுத்து வேலவருக்கும் வள்ளி அம்மைக்கும் விசேட பூசை இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து சந்நிதியானின் கொடியேற்றப்பட்டு ஆலய வாயிலில் சேவல் கொடி பறக்கவிடப்பட்டது.
அதன்பின் எழுந்தருளி வேலவருக்குப் பூசை இடம்பெற்றதும் அவர் கேடகத்தில் எழுந்தருளச் செய்து உள்வீதியுலா வரச் செய்தனர்.
அன்னதான கந்தன் என்று அழைக்கப்படும் சந்நிதியானின் திருவிழாவில் அதிகளவான பக்தர்கள் முதல் நாளிலே கலந்து கொண்டு காவடி எடுத்தும் பால் செம்பு எடுத்தும் நேர்த்திக்கடன்களை நிறைவு செய்தனர்.
பதினாறு நாட்கள் இடம்பெறும் சந்நிதி முருகன் திருவிழாவில் செப்டெம்பர் 01 ஆம் திகதி பூங்காவனத் திருவிழாவும் , செப்ரெம்பர் 02ஆம் திகதி கைலாய வாகன உற்சவம் இடம்பெறவுள்ளது.
அத்துடன் செப்ரெம்பர் 06 ஆம் திகதி தேர்த்திருவிழாவும், செப்ரெம்பர் 07ஆம் திகதி தீர்த்தத்திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
சந்நிதி முருகன் ஆலய பெருந்திருவிழாவை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்பு கடமையில் குடிசார் உடையிலும், சீருடையிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சேவல் கொடி பறக்கவிட்டு கொடியேறினார் சந்நிதி முருகன் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற திருவிழா இன்று ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் ஆரம்பமானது.வள்ளி அம்மன் வாசலுக்கு எழுந்தருளி வேலவர் வந்ததும் அவரை வள்ளி அம்மன் கோவிலுக்குக் கொண்டு சென்று தீர்த்தக் குளத்தில் நீர் எடுத்து வேலவருக்கும் வள்ளி அம்மைக்கும் விசேட பூசை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து சந்நிதியானின் கொடியேற்றப்பட்டு ஆலய வாயிலில் சேவல் கொடி பறக்கவிடப்பட்டது. அதன்பின் எழுந்தருளி வேலவருக்குப் பூசை இடம்பெற்றதும் அவர் கேடகத்தில் எழுந்தருளச் செய்து உள்வீதியுலா வரச் செய்தனர்.அன்னதான கந்தன் என்று அழைக்கப்படும் சந்நிதியானின் திருவிழாவில் அதிகளவான பக்தர்கள் முதல் நாளிலே கலந்து கொண்டு காவடி எடுத்தும் பால் செம்பு எடுத்தும் நேர்த்திக்கடன்களை நிறைவு செய்தனர்.பதினாறு நாட்கள் இடம்பெறும் சந்நிதி முருகன் திருவிழாவில் செப்டெம்பர் 01 ஆம் திகதி பூங்காவனத் திருவிழாவும் , செப்ரெம்பர் 02ஆம் திகதி கைலாய வாகன உற்சவம் இடம்பெறவுள்ளது. அத்துடன் செப்ரெம்பர் 06 ஆம் திகதி தேர்த்திருவிழாவும், செப்ரெம்பர் 07ஆம் திகதி தீர்த்தத்திருவிழாவும் இடம்பெறவுள்ளது. சந்நிதி முருகன் ஆலய பெருந்திருவிழாவை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்பு கடமையில் குடிசார் உடையிலும், சீருடையிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.