• Aug 24 2025

மேலைத்தேய வாத்திய அணிப் போட்டிகள்!

shanuja / Aug 23rd 2025, 8:47 pm
image

யாழ்.தென்மராட்சி கல்வி வலய ஆரம்பப் பிரிவுப் பாடசாலைகளுக்கு இடையிலான "மேலைத்தேய வாத்திய அணிப் போட்டிகள்" சாவகச்சேரி டிறிபேக்  கல்லூரியில் இன்று(23) இடம்பெற்றது.


தென்மராட்சி கல்வி வலயத்தைச் சேர்ந்த 10 மேலைத்தேய வாத்திய அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றிருந்தன.


இப்போட்டியில் முதலாமிடத்தை சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையும், இரண்டாம் இடத்தை மட்டுவில் வடக்கு அரசினர்  தமிழ் கலவன் பாடசாலையும், மூன்றாம் இடத்தை கைதடி நுணாவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையும்  பெற்றுக் கொண்டன.


நிகழ்வில் விருந்தினர்களாக, தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கி.கமலராஜன், தென்மராட்சி வலயக்கல்வி அலுவலக கணக்காளர் சோ.பிரபு, சாவகச்சேரி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர்  க.ஜெயரூபன், மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையின் அதிபர் க.இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு, போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கிவைத்தனர்.

மேலைத்தேய வாத்திய அணிப் போட்டிகள் யாழ்.தென்மராட்சி கல்வி வலய ஆரம்பப் பிரிவுப் பாடசாலைகளுக்கு இடையிலான "மேலைத்தேய வாத்திய அணிப் போட்டிகள்" சாவகச்சேரி டிறிபேக்  கல்லூரியில் இன்று(23) இடம்பெற்றது.தென்மராட்சி கல்வி வலயத்தைச் சேர்ந்த 10 மேலைத்தேய வாத்திய அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றிருந்தன.இப்போட்டியில் முதலாமிடத்தை சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையும், இரண்டாம் இடத்தை மட்டுவில் வடக்கு அரசினர்  தமிழ் கலவன் பாடசாலையும், மூன்றாம் இடத்தை கைதடி நுணாவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையும்  பெற்றுக் கொண்டன.நிகழ்வில் விருந்தினர்களாக, தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கி.கமலராஜன், தென்மராட்சி வலயக்கல்வி அலுவலக கணக்காளர் சோ.பிரபு, சாவகச்சேரி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர்  க.ஜெயரூபன், மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையின் அதிபர் க.இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு, போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கிவைத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement