• Aug 24 2025

ஜனாதிபதிக்கான ஒதுக்கத்தையே ரணில் செலவிட்டார் - வஜிர அபேவர்தன!

shanuja / Aug 23rd 2025, 10:01 pm
image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்ச்சைக்குரிய வெளிநாட்டு பயணத்துக்காக செலவிடப்பட்ட பணம், பாதீட்டின் கீழ் ஜனாதிபதியின் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் இணைந்து இன்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். 


ஜனாதிபதியாக இருந்தபோது ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட இந்த பயணத்துக்காக செலவிட்ட பணம், ஜனாதிபதியின் செலவுக்காக ஒதுக்கப்பட்ட பணமே வேறு ஒதுக்கத்தில் அல்லாத பணம் அல்ல.


இந்த செலவுகள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் அலுவலகம் கணக்காய்வுகளை மேற்கொண்டது.


இந்த கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் கூட, அவ்வாறான பிரச்சினைகள் குறித்து எந்தவித குறிப்புகளும் இடம்பெறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கான ஒதுக்கத்தையே ரணில் செலவிட்டார் - வஜிர அபேவர்தன முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்ச்சைக்குரிய வெளிநாட்டு பயணத்துக்காக செலவிடப்பட்ட பணம், பாதீட்டின் கீழ் ஜனாதிபதியின் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் இணைந்து இன்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதியாக இருந்தபோது ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட இந்த பயணத்துக்காக செலவிட்ட பணம், ஜனாதிபதியின் செலவுக்காக ஒதுக்கப்பட்ட பணமே வேறு ஒதுக்கத்தில் அல்லாத பணம் அல்ல.இந்த செலவுகள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் அலுவலகம் கணக்காய்வுகளை மேற்கொண்டது.இந்த கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் கூட, அவ்வாறான பிரச்சினைகள் குறித்து எந்தவித குறிப்புகளும் இடம்பெறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement