முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வயது மற்றும் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு, முதல் 24 மணிநேரம் அவரை தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பது பொருத்தமானது என்று விசேட மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர்.
எனவே, அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்டதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க சிறைச்சாலை மருத்துவமனையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், மருத்துவர்களின் ஆலோசனைக்கமைய தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ரணில் விக்கிரமசிங்க மாற்றப்பட்டார்.
24 மணிநேரம் ரணில் தீவிர கண்காணிப்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வயது மற்றும் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு, முதல் 24 மணிநேரம் அவரை தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பது பொருத்தமானது என்று விசேட மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர்.எனவே, அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்டதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க சிறைச்சாலை மருத்துவமனையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர், மருத்துவர்களின் ஆலோசனைக்கமைய தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ரணில் விக்கிரமசிங்க மாற்றப்பட்டார்.