மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் 5 மாத காலமாக பாரதூக்கி இயங்கவில்லை.இதனால் கர்ப்பிணிப் பெண்கள் சிரமப்படுகின்றனர் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வைத்தியசாலையில் உள்ள அதிகாரியிடம் கேட்ட போது பிரதான மின் மாணி பகுதியில் இருந்து மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ள மின் இணைப்புக்கு பொருத்தப்பட்டுள்ள கேபல் வயர் குழாய் பகுதியில் தீ மாற்றியதால் பாரதூக்கிக்காண மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
அதனை சீர் செய்ய சம்பந்தப்பட்ட மின்சார சபைக்கும் சம்பந்தப்பட்ட திணைக்களம் மற்றும் நுவரெலியா மாவட்ட சுகாதார ஆணையாளர் அனைவருக்கும் தகவல் வழங்கப்பட்டதாகவும் அந்த கேபல் வயர் மாற்றம் செய்ய பாரிய அளவில் நிதி தேவை என்பதால் காலம் தாமதம் ஆகுவதாகவும் தெரிய வந்துள்ளது.
மலையக கிராம பகுதிகளில் உள்ள மக்கள் நாளாந்தம் கூலி வேலை செய்பவர்கள்.திடீர் என பிரசவம் ஏற்படும் பட்சத்தில் வாகனத்தில் ஏற்றிகொண்டு வைத்தியசாலைக்கு கொண்டு வந்தால் முதல் மாடிக்கு கொண்டு செல்ல முன் இடைநடுவில் பிரசவம் ஏற்படும் பட்சத்தில் தாய் சேய் மரணிக்க நேரிடும்.
ஆகையால் சம்பந்தப்பட்ட அமைச்சு மற்றும் மத்திய மாகாண சுகாதார அதிகாரிகள் நுவரெலியா மாவட்ட சுகாதார அதிகாரிகள் மின்சார சபை உடன் கவணம் செலுத்தி பாரதூக்கிக்கு வரும் மின் இணைப்பை பூமிக்கு அடியில் இல்லாமல் கம்பத்தில் இருந்து பெற்று தர முன் வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் பாரதூக்கி பழுது - கர்ப்பிணி பெண்கள் அவதி மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் 5 மாத காலமாக பாரதூக்கி இயங்கவில்லை.இதனால் கர்ப்பிணிப் பெண்கள் சிரமப்படுகின்றனர் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் வைத்தியசாலையில் உள்ள அதிகாரியிடம் கேட்ட போது பிரதான மின் மாணி பகுதியில் இருந்து மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ள மின் இணைப்புக்கு பொருத்தப்பட்டுள்ள கேபல் வயர் குழாய் பகுதியில் தீ மாற்றியதால் பாரதூக்கிக்காண மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.அதனை சீர் செய்ய சம்பந்தப்பட்ட மின்சார சபைக்கும் சம்பந்தப்பட்ட திணைக்களம் மற்றும் நுவரெலியா மாவட்ட சுகாதார ஆணையாளர் அனைவருக்கும் தகவல் வழங்கப்பட்டதாகவும் அந்த கேபல் வயர் மாற்றம் செய்ய பாரிய அளவில் நிதி தேவை என்பதால் காலம் தாமதம் ஆகுவதாகவும் தெரிய வந்துள்ளது.மலையக கிராம பகுதிகளில் உள்ள மக்கள் நாளாந்தம் கூலி வேலை செய்பவர்கள்.திடீர் என பிரசவம் ஏற்படும் பட்சத்தில் வாகனத்தில் ஏற்றிகொண்டு வைத்தியசாலைக்கு கொண்டு வந்தால் முதல் மாடிக்கு கொண்டு செல்ல முன் இடைநடுவில் பிரசவம் ஏற்படும் பட்சத்தில் தாய் சேய் மரணிக்க நேரிடும். ஆகையால் சம்பந்தப்பட்ட அமைச்சு மற்றும் மத்திய மாகாண சுகாதார அதிகாரிகள் நுவரெலியா மாவட்ட சுகாதார அதிகாரிகள் மின்சார சபை உடன் கவணம் செலுத்தி பாரதூக்கிக்கு வரும் மின் இணைப்பை பூமிக்கு அடியில் இல்லாமல் கம்பத்தில் இருந்து பெற்று தர முன் வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.