• Sep 19 2024

சாதிக்க வயது தடையல்ல...! 86 வயதில் எடை தூக்கி உலக சாதனை படைத்த முதியவர்..! குவியும் பாராட்டுக்கள்..!samugammedia

Sharmi / Mar 31st 2023, 9:52 pm
image

Advertisement

எடை துக்கும் போட்டியில் 86 வயதுடைய முதியவர் ஒருவர் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.



இங்கிலாந்தின் டெர்பிஷையர் பகுதியில் வசிக்கும் பிரையன் வின்ஸ்லோ என்பவரே இவ்வாறாக எடை தூக்கி தேசிய அளவிலும் உலக அளவிலும் சாதனை புரிந்துள்ளார்.



பிரிட்டனில் இம்மாதம் அளவில் நடைபெற்ற எடை தூக்கும் போட்டியில் கலந்துகொண்ட அவர், முதலில் 75 கிலோகிராம் எடையைத் தூக்கிய அவர் பின்னர், தொடர்ந்து  77.5 கிலோ எடையினை தூக்கி 2 சாதனைகளை ஒரே நாளில் படைத்துள்ளார்.



எடைக்கும் வயதுக்கும் அப்பாற்பட்டு வின்ஸ்லோ எடைதூக்கியது பிரிட்டனில் பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.

இது தொடர்பாக அவர், எடைதூக்கும் போட்டியில் சாதனை படைத்ததில் பெருமகிழ்ச்சியடைவதாகவும்,  தான் பங்கெடுத்த போட்டிகளில் இதுவே மிகச் சிறந்தது எனவும் கூறியுள்ளார்.

அத்துடன்  எடைதூக்குவது என் வாழ்க்கையில் முக்கிய அம்சங்களில் ஒன்று என குறிப்பிட்ட அவர் என்னால் முடிந்தவரை தொடர்ந்து எடைதூக்குவேன் கருத்து வெளியிட்டுள்ளார்.


சாதிக்க வயது தடையல்ல. 86 வயதில் எடை தூக்கி உலக சாதனை படைத்த முதியவர். குவியும் பாராட்டுக்கள்.samugammedia எடை துக்கும் போட்டியில் 86 வயதுடைய முதியவர் ஒருவர் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்தின் டெர்பிஷையர் பகுதியில் வசிக்கும் பிரையன் வின்ஸ்லோ என்பவரே இவ்வாறாக எடை தூக்கி தேசிய அளவிலும் உலக அளவிலும் சாதனை புரிந்துள்ளார்.பிரிட்டனில் இம்மாதம் அளவில் நடைபெற்ற எடை தூக்கும் போட்டியில் கலந்துகொண்ட அவர், முதலில் 75 கிலோகிராம் எடையைத் தூக்கிய அவர் பின்னர், தொடர்ந்து  77.5 கிலோ எடையினை தூக்கி 2 சாதனைகளை ஒரே நாளில் படைத்துள்ளார்.எடைக்கும் வயதுக்கும் அப்பாற்பட்டு வின்ஸ்லோ எடைதூக்கியது பிரிட்டனில் பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.இது தொடர்பாக அவர், எடைதூக்கும் போட்டியில் சாதனை படைத்ததில் பெருமகிழ்ச்சியடைவதாகவும்,  தான் பங்கெடுத்த போட்டிகளில் இதுவே மிகச் சிறந்தது எனவும் கூறியுள்ளார். அத்துடன்  எடைதூக்குவது என் வாழ்க்கையில் முக்கிய அம்சங்களில் ஒன்று என குறிப்பிட்ட அவர் என்னால் முடிந்தவரை தொடர்ந்து எடைதூக்குவேன் கருத்து வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement