நாட்டில் ஏற்பட்ட சீரற்ற கால நிலையால் நெற் செய்கை வயல் நிலங்களூம் பாதிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வன்னியனார் மடு,புளியடிக்குடா உள்ளிட்ட வயல் நிலங்களும் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளன.
பெரும்போக செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் நெற் செய்கை பண்ணப்பட்டுள்ளது.
நகைகளை அடகு வைத்தும் கடன் பெற்றும் செய்த பெரும்போக நெற் செய்கை வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பசளை,கிருமிநாசினிகள் பாரிய விலை கொடுத்து வாங்கி வேளாண்மை செய்கையில் ஈடுபட்டும் தற்போது நஷ்டத்தை எதிர் நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
கனமழை மற்றும் கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாலும் நெற் செய்கை அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அரசாங்கம் மானியம் தருவதாக கூறியும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவே நஷ்ட ஈடுகளை தந்து விவசாயிகளை காப்பாற்றுமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.
திருமலையில் கனமழையால் வேளாண்மை செய்கை பாதிப்பு. விவசாயிகள் கவலை.samugammedia நாட்டில் ஏற்பட்ட சீரற்ற கால நிலையால் நெற் செய்கை வயல் நிலங்களூம் பாதிக்கப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வன்னியனார் மடு,புளியடிக்குடா உள்ளிட்ட வயல் நிலங்களும் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்போக செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் நெற் செய்கை பண்ணப்பட்டுள்ளது. நகைகளை அடகு வைத்தும் கடன் பெற்றும் செய்த பெரும்போக நெற் செய்கை வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். பசளை,கிருமிநாசினிகள் பாரிய விலை கொடுத்து வாங்கி வேளாண்மை செய்கையில் ஈடுபட்டும் தற்போது நஷ்டத்தை எதிர் நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.கனமழை மற்றும் கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாலும் நெற் செய்கை அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அரசாங்கம் மானியம் தருவதாக கூறியும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவே நஷ்ட ஈடுகளை தந்து விவசாயிகளை காப்பாற்றுமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.