• Apr 17 2026

பொடி பெட்டியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!

shanu / Apr 17th 2026, 10:34 am
image

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'லொகு பெட்டி'யின் சகோதரரான 'பொடி பெட்டி' என்பவரை இலக்கு வைத்து அஹுங்கல்லை பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 


நேற்று (16) இரவு 11.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


'பொடி பெட்டி' என்பவர் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது, இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 


நேற்று இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பி கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இதில் அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.  

பொடி பெட்டியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'லொகு பெட்டி'யின் சகோதரரான 'பொடி பெட்டி' என்பவரை இலக்கு வைத்து அஹுங்கல்லை பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்று (16) இரவு 11.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 'பொடி பெட்டி' என்பவர் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது, இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பி கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இதில் அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.  

Advertisement

Advertisement

Advertisement