• Jul 22 2026

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயம்

Chithra / Jul 22nd 2026, 7:39 pm
image


கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் இன்று (22) மதியம் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுடைய சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.


நான்கு சிறுவர்கள் இணைந்து மகாவலி ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


சம்பவத்தின் போது ஏனைய மூன்று சிறுவர்களும் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.


காணாமல் போன சிறுவனைத் தேடும் பணிகள் பிரதேசவாசிகள் மற்றும் கம்பளை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயம் கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் இன்று (22) மதியம் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுடைய சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.நான்கு சிறுவர்கள் இணைந்து மகாவலி ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தின் போது ஏனைய மூன்று சிறுவர்களும் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.காணாமல் போன சிறுவனைத் தேடும் பணிகள் பிரதேசவாசிகள் மற்றும் கம்பளை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement