ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசானது பௌத்த பிக்குகள் மற்றும் புத்த சாசனத்துடன் முரண்பாடான போக்கைக் கொண்டிருப்பதுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலக்கு வைத்தே தனது அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
அரசு நாட்டின் முக்கிய விசாரணை மற்றும் புலனாய்வு நிறுவனங்களில் தமக்கு வேண்டிய அரசியல் ஆதரவாளர்களை நியமித்துள்ளது. ரவி செனவிரத்ன போன்றோரின் நியமனங்கள் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷ, ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைப் பொலிஸார் முற்றிலும் அரசியல் உள்நோக்கத்துடனேயே கையாண்டு வருகின்றனர்.
சர்வதேச ரீதியில் பயங்கரவாதத்தை ஒழித்த தலைவர்கள் கௌரவிக்கப்படும் நிலையில், இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அரசு காட்டும் அணுகுமுறை மிகவும் தவறானது.
பௌத்த பிக்குமார்கள் நீண்ட தூரம் நடைபயணமாக வந்து ஜனாதிபதி செயலகத்தில் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், அங்கேயே அவர்களுக்குப் பதிலளிக்காது பதுளையில் நடைபெற்ற கூட்டத்தில் பெண்களின் முன்னிலையில் ஜனாதிபதி பதிலளித்த விதம் ஒரு பொறுப்பான தலைவருக்குரிய பண்பல்ல. இது மதகுருமார்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையாகும்.
தற்போதைய அரசு ஈழக் கோரிக்கையை ஆதரித்த தரப்பினரின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்ததால், அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே செயற்பட்டு வருகின்றது. இது நாட்டின் எதிர்காலத்துக்குப் பாரிய ஆபத்தானது - என்றார்.
பௌத்த மகா சங்கத்தை அவமதிக்கும் ஜனாதிபதி - மஹிந்தவை இலக்கு வைத்து அரசியல் பழிவாங்கல் என்று மொட்டு குற்றச்சாட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசானது பௌத்த பிக்குகள் மற்றும் புத்த சாசனத்துடன் முரண்பாடான போக்கைக் கொண்டிருப்பதுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலக்கு வைத்தே தனது அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் கூறுகையில்,அரசு நாட்டின் முக்கிய விசாரணை மற்றும் புலனாய்வு நிறுவனங்களில் தமக்கு வேண்டிய அரசியல் ஆதரவாளர்களை நியமித்துள்ளது. ரவி செனவிரத்ன போன்றோரின் நியமனங்கள் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.நாமல் ராஜபக்ஷ, ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைப் பொலிஸார் முற்றிலும் அரசியல் உள்நோக்கத்துடனேயே கையாண்டு வருகின்றனர்.சர்வதேச ரீதியில் பயங்கரவாதத்தை ஒழித்த தலைவர்கள் கௌரவிக்கப்படும் நிலையில், இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அரசு காட்டும் அணுகுமுறை மிகவும் தவறானது.பௌத்த பிக்குமார்கள் நீண்ட தூரம் நடைபயணமாக வந்து ஜனாதிபதி செயலகத்தில் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், அங்கேயே அவர்களுக்குப் பதிலளிக்காது பதுளையில் நடைபெற்ற கூட்டத்தில் பெண்களின் முன்னிலையில் ஜனாதிபதி பதிலளித்த விதம் ஒரு பொறுப்பான தலைவருக்குரிய பண்பல்ல. இது மதகுருமார்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையாகும்.தற்போதைய அரசு ஈழக் கோரிக்கையை ஆதரித்த தரப்பினரின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்ததால், அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே செயற்பட்டு வருகின்றது. இது நாட்டின் எதிர்காலத்துக்குப் பாரிய ஆபத்தானது - என்றார்.