யாழ்ப்பாணம், வேலணை குறிகாட்டுவான் இறங்குதுறையை அண்மித்த பகுதியில் இயங்கிவரும் வாகன தரிப்பிடத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், முறையான பொறிமுறையொன்றை உருவாக்குமாறு வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (22) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றபோதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதன்போது சபையில் முன்மொழிவொன்றைச் சமர்ப்பித்து உரையாற்றிய அனுசியா ஜெயகாந்த், குறிகாட்டுவான் வாகன தரிப்பிட விவகாரத்தில் சபையின் வருமானத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும், வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் பாதிக்கப்படாத வகையிலும் தீர்வு காணப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
குறிகாட்டுவான் பகுதியில் வேலணை பிரதேச சபைக்குச் சொந்தமான காணி இல்லாத நிலையில், தனியார் ஒருவருக்கு வருடாந்த ஒப்பந்த அடிப்படையில் வாகன தரிப்பிடத்தை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சபையினால் அனுமதிக்கப்பட்ட வரையறைகளுக்கு அமைவாக ஒப்பந்ததாரர் சேவையை முன்னெடுத்து வருகின்றபோதிலும், வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் தரப்பிலிருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக, அதிகளவிலான வாகனங்கள் வந்து செல்லும் குறிகாட்டுவான் இறங்குதுறைப் பகுதியில், வாகன தரிப்பிடத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு மாத்திரமன்றி, பயணிகளை இறக்கிவிட்டு உடனடியாக வெளியேறும் வாகனங்களிடமிருந்தும் கட்டணம் அறவிடப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில் அண்மையில் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
எனவே, தற்போது நடைமுறையில் உள்ள குறைபாடுகளை ஆராய்ந்து, சபையின் வருமானத்தையும் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகளின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் தெளிவான நடைமுறையொன்றை உருவாக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார், எதிர்வரும் 2027ஆம் ஆண்டு முதல் முறையான பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டு, எந்தவொரு தரப்பினரும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
பயணிகளை இறக்கிவிட்டுச் செல்லும் வாகனங்களுக்கும் கட்டணமா குறிகாட்டுவானில் எழுந்த சர்ச்சை யாழ்ப்பாணம், வேலணை குறிகாட்டுவான் இறங்குதுறையை அண்மித்த பகுதியில் இயங்கிவரும் வாகன தரிப்பிடத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், முறையான பொறிமுறையொன்றை உருவாக்குமாறு வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (22) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றபோதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.இதன்போது சபையில் முன்மொழிவொன்றைச் சமர்ப்பித்து உரையாற்றிய அனுசியா ஜெயகாந்த், குறிகாட்டுவான் வாகன தரிப்பிட விவகாரத்தில் சபையின் வருமானத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும், வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் பாதிக்கப்படாத வகையிலும் தீர்வு காணப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.குறிகாட்டுவான் பகுதியில் வேலணை பிரதேச சபைக்குச் சொந்தமான காணி இல்லாத நிலையில், தனியார் ஒருவருக்கு வருடாந்த ஒப்பந்த அடிப்படையில் வாகன தரிப்பிடத்தை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.சபையினால் அனுமதிக்கப்பட்ட வரையறைகளுக்கு அமைவாக ஒப்பந்ததாரர் சேவையை முன்னெடுத்து வருகின்றபோதிலும், வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் தரப்பிலிருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.குறிப்பாக, அதிகளவிலான வாகனங்கள் வந்து செல்லும் குறிகாட்டுவான் இறங்குதுறைப் பகுதியில், வாகன தரிப்பிடத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு மாத்திரமன்றி, பயணிகளை இறக்கிவிட்டு உடனடியாக வெளியேறும் வாகனங்களிடமிருந்தும் கட்டணம் அறவிடப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இந்த விவகாரம் தொடர்பில் அண்மையில் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.எனவே, தற்போது நடைமுறையில் உள்ள குறைபாடுகளை ஆராய்ந்து, சபையின் வருமானத்தையும் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகளின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் தெளிவான நடைமுறையொன்றை உருவாக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.இதற்குப் பதிலளித்த வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார், எதிர்வரும் 2027ஆம் ஆண்டு முதல் முறையான பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டு, எந்தவொரு தரப்பினரும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.