நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகின்றது.
இதனால் தாழ்நில பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது தடவையாக நேற்றையதினம் மீண்டும் திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது குளத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் குளத்தின் 14 வான்கதவுகளில் 8 வான்கதவுகள் 6 அங்குலத்துக்குத் திறந்து விடப்பட்டது
அதேவேளை, இரணைமடுக் குளத்தின் கீழுள்ள தாழ் நிலப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் பாதுகாப்புடன் செயற்படுமாறு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.
இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் மீண்டும் திறப்பு. மக்களே அவதானம்.samugammedia நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகின்றது.இதனால் தாழ்நில பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறானதொரு நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது தடவையாக நேற்றையதினம் மீண்டும் திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.தற்போது குளத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் குளத்தின் 14 வான்கதவுகளில் 8 வான்கதவுகள் 6 அங்குலத்துக்குத் திறந்து விடப்பட்டதுஅதேவேளை, இரணைமடுக் குளத்தின் கீழுள்ள தாழ் நிலப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் பாதுகாப்புடன் செயற்படுமாறு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.