தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று (3) திறக்கப்பட்டுள்ளதாக புலத்சிங்கள பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
இதன்படி மின் உற்பத்தியின் போது வெளியாகும் அளவோடு வினாடிக்கு 120 கன மீட்டர் வீதம் ஆற்றில் தண்ணீர் விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் தற்போது வெள்ள அபாயம் இல்லையெனவும்,
ஆனால், மழை தொடரும் பட்சத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் நீர் மட்டம் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இரண்டு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு - வெள்ளம் தொடர்பில் எச்சரிக்கை தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று (3) திறக்கப்பட்டுள்ளதாக புலத்சிங்கள பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.இதன்படி மின் உற்பத்தியின் போது வெளியாகும் அளவோடு வினாடிக்கு 120 கன மீட்டர் வீதம் ஆற்றில் தண்ணீர் விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.ஆறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் தற்போது வெள்ள அபாயம் இல்லையெனவும்,ஆனால், மழை தொடரும் பட்சத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் நீர் மட்டம் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.