• Feb 11 2026

வடக்கு உட்பட பல பகுதிகளில் மோசமான நிலையில் காற்றின் தரம்!

Chithra / Jan 19th 2026, 12:44 pm
image

 

நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரத்தில் சரிவு காணப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.


அதன்படி, நேற்று (18) முதல் நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் இந்த எண்ணிக்கை 150 முதல் 200 வரை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


இது ஓரளவு சாதகமற்ற சூழ்நிலை என்றும், அடுத்த 2 நாட்களுக்குள் இந்த நிலைமை சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


சர்வதேச எல்லைகளுக்கு இடையிலான காற்று சுழற்சியே இந்த நிலைமைக்கு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


காற்றின் தரத்தில் ஏற்படும் இந்த சரிவு உணர்திறன் மிக்க நபர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், சுவாசிப்பதில் சிரமம் அல்லது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் அவர் மேலும் அறிவுறுத்தினார்.


வடக்கு உட்பட பல பகுதிகளில் மோசமான நிலையில் காற்றின் தரம்  நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரத்தில் சரிவு காணப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.அதன்படி, நேற்று (18) முதல் நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் இந்த எண்ணிக்கை 150 முதல் 200 வரை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.இது ஓரளவு சாதகமற்ற சூழ்நிலை என்றும், அடுத்த 2 நாட்களுக்குள் இந்த நிலைமை சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.சர்வதேச எல்லைகளுக்கு இடையிலான காற்று சுழற்சியே இந்த நிலைமைக்கு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.காற்றின் தரத்தில் ஏற்படும் இந்த சரிவு உணர்திறன் மிக்க நபர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், சுவாசிப்பதில் சிரமம் அல்லது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் அவர் மேலும் அறிவுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement