• Nov 24 2024

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் செயலிழப்பால் சென்னையில் விமான சேவை பாதிப்பு

Tharun / Jul 19th 2024, 6:54 pm
image

மைக்ரோசொப்ட்  இயங்குதளம் செயலிகள் மற்றும் சேவைகள், உலகம் முழுவதும்  பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு போர்டிங் பாஸ் வழங்குவதிலும், விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் விண்டோஸில் ஏற்பட்ட திடீர் கோளாறால் பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐ.டி நிறுவன ஊழியர்களின் கம்ப்யூட்டர்கள் முடங்கியதால் அங்கலாய்த்து  வருகின்றனர். சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்தான் கோளாறு ஏற்படுவதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று பகல் 12 மணியில் இருந்து விமான சேவை திடீரென முடங்கியது. இதனால் விமான பயணிகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் போர்டிங் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

அத்துடன் இதனை அடுத்து விமான நிறுவனங்கள் தங்களுடைய கவுன்டர்களில் கூடுதல் ஊழியர்களை நியமித்து போர்டிங் பாஸ்களை கைகளால் எழுதிக் கொடுத்தனர். ஒவ்வொரு பயணிக்கும் கைகளால் போர்டிங் பாஸ் எழுதிக் கொடுத்ததால் பயணிகள் விமானங்களில் ஏறுவதிலும் விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் சென்னையில் இருந்து மும்பை லக்னோ பெங்களூரு மதுரை திருவனந்தபுரம் பாட்னா சிலிகுரி ஐதராபாத் கோவை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் 20க்கும் மேற்பட்ட விமானங்கள் சுமார் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் செயலிழப்பால் சென்னையில் விமான சேவை பாதிப்பு மைக்ரோசொப்ட்  இயங்குதளம் செயலிகள் மற்றும் சேவைகள், உலகம் முழுவதும்  பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு போர்டிங் பாஸ் வழங்குவதிலும், விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் விண்டோஸில் ஏற்பட்ட திடீர் கோளாறால் பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐ.டி நிறுவன ஊழியர்களின் கம்ப்யூட்டர்கள் முடங்கியதால் அங்கலாய்த்து  வருகின்றனர். சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்தான் கோளாறு ஏற்படுவதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று பகல் 12 மணியில் இருந்து விமான சேவை திடீரென முடங்கியது. இதனால் விமான பயணிகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் போர்டிங் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.அத்துடன் இதனை அடுத்து விமான நிறுவனங்கள் தங்களுடைய கவுன்டர்களில் கூடுதல் ஊழியர்களை நியமித்து போர்டிங் பாஸ்களை கைகளால் எழுதிக் கொடுத்தனர். ஒவ்வொரு பயணிக்கும் கைகளால் போர்டிங் பாஸ் எழுதிக் கொடுத்ததால் பயணிகள் விமானங்களில் ஏறுவதிலும் விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் சென்னையில் இருந்து மும்பை லக்னோ பெங்களூரு மதுரை திருவனந்தபுரம் பாட்னா சிலிகுரி ஐதராபாத் கோவை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் 20க்கும் மேற்பட்ட விமானங்கள் சுமார் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement