• Oct 03 2024

குன்றும் குழியுமாக மாறிய தொண்டைமானாறு பிரதான வீதி...! அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்...!samugammedia

Sharmi / Jan 13th 2024, 3:47 pm
image

Advertisement

யாழ் அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி ஊடாக பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.

குறித்த வீதி நீண்ட காலமாக திருத்தம் செய்யப்படாமல் குன்றும் குழியுமாக காணப்பட்டது.

அதனால் அந்த வீதி ஊடாக பலரும் சிரமங்களுக்கு மத்தியிலையே பயணித்து வந்தனர். 

இந்நிலையில் கடந்த வாரங்களில் பெய்த மழை காரணமாக தொண்டைமானாறு  நீர்மட்டம் அதிகரித்து,குறித்த வீதியினை மேலாக வெள்ளம் ஓடுகிறது. 

ஏற்கனவே குன்றும் குழியுமாக இருந்த வீதி தற்போது வெள்ளம் மேவி ஓடுவதனால் , குழிகள் தெரியாததால் , பலரும் விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். 

புதிதாக அந்த வீதியில் பயணிப்பவர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்குவதுடன் , சிறிய ரக மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் பயணிப்போரின் வாகனங்களும் சேதமடைந்து வருகின்றன. 

குறித்த வீதி ஊடாக பயணிக்க முடியாத நிலைமைகள் காணப்படுகின்றபோதிலும் , அவை தொடர்பிலான அறிவுறுத்தல்கள் காட்சிப்படுத்தபடாமையால் , பலரும் அந்த வீதி ஊடாக பயணித்து விபத்துக்களை சந்திக்க நேரிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.



குன்றும் குழியுமாக மாறிய தொண்டைமானாறு பிரதான வீதி. அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்.samugammedia யாழ் அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி ஊடாக பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.குறித்த வீதி நீண்ட காலமாக திருத்தம் செய்யப்படாமல் குன்றும் குழியுமாக காணப்பட்டது. அதனால் அந்த வீதி ஊடாக பலரும் சிரமங்களுக்கு மத்தியிலையே பயணித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரங்களில் பெய்த மழை காரணமாக தொண்டைமானாறு  நீர்மட்டம் அதிகரித்து,குறித்த வீதியினை மேலாக வெள்ளம் ஓடுகிறது. ஏற்கனவே குன்றும் குழியுமாக இருந்த வீதி தற்போது வெள்ளம் மேவி ஓடுவதனால் , குழிகள் தெரியாததால் , பலரும் விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். புதிதாக அந்த வீதியில் பயணிப்பவர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்குவதுடன் , சிறிய ரக மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் பயணிப்போரின் வாகனங்களும் சேதமடைந்து வருகின்றன. குறித்த வீதி ஊடாக பயணிக்க முடியாத நிலைமைகள் காணப்படுகின்றபோதிலும் , அவை தொடர்பிலான அறிவுறுத்தல்கள் காட்சிப்படுத்தபடாமையால் , பலரும் அந்த வீதி ஊடாக பயணித்து விபத்துக்களை சந்திக்க நேரிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement