• Apr 04 2025

ஐதேகவின் உப தலைவராக மீண்டும் அகில விராஜ் காரியவசம் நியமனம்!

Chithra / Apr 2nd 2025, 8:47 am
image

 

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் கட்சியின் செயற்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 

அத்துடன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.


ஐதேகவின் உப தலைவராக மீண்டும் அகில விராஜ் காரியவசம் நியமனம்  ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் கட்சியின் செயற்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement