• Jul 04 2025

நாடு முழுவதும் இன்று முதல் அமுலுக்கு வந்த பேருந்து கட்டண குறைப்பு

Bus
Chithra / Jul 4th 2025, 12:30 pm
image

 

வருடாந்திர கட்டண திருத்தத்தின் கீழ், 0.55% சதவீதம் குறைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து கட்டணங்கள் இன்று (04) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வந்துள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

புதிய கட்டண திருத்தத்தின் கீழ், பொது சேவைக்கான குறைந்தபட்ச பஸ் கட்டணமான 27 ரூபா, இரண்டாவது கட்டணம் 35 மற்றும் 45 ரூபா கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திருத்தத்தின் படி, ரூ. 56, 77, 87, 117, 136 மற்றும் 141 போன்ற கட்டணங்கள் 1 ரூபா குறைக்கப்பட்டுள்ளன.

அதிகபட்ச பொது சேவை கட்டணமான ரூ. 2170 இல்  11 ரூபா குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக்கட்டண குறைப்பு, பொது சேவைகள், அரை சொகுசு, அதிசொகுசு சேவைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் இயங்கும் அனைத்து வகை பேருந்துகளுக்கும் பொருந்தும் என தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.


நாடு முழுவதும் இன்று முதல் அமுலுக்கு வந்த பேருந்து கட்டண குறைப்பு  வருடாந்திர கட்டண திருத்தத்தின் கீழ், 0.55% சதவீதம் குறைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து கட்டணங்கள் இன்று (04) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வந்துள்ளது.தேசிய போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,புதிய கட்டண திருத்தத்தின் கீழ், பொது சேவைக்கான குறைந்தபட்ச பஸ் கட்டணமான 27 ரூபா, இரண்டாவது கட்டணம் 35 மற்றும் 45 ரூபா கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய திருத்தத்தின் படி, ரூ. 56, 77, 87, 117, 136 மற்றும் 141 போன்ற கட்டணங்கள் 1 ரூபா குறைக்கப்பட்டுள்ளன.அதிகபட்ச பொது சேவை கட்டணமான ரூ. 2170 இல்  11 ரூபா குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இக்கட்டண குறைப்பு, பொது சேவைகள், அரை சொகுசு, அதிசொகுசு சேவைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் இயங்கும் அனைத்து வகை பேருந்துகளுக்கும் பொருந்தும் என தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement