• Apr 06 2025

அனைத்து மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் கொழும்புக்கு அழைப்பு

Anaath / Aug 3rd 2024, 11:25 am
image

நாட்டின் அனைத்து மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும், மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்களும் கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்றைய தினம் அழைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில்  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L. ரத்நாயக்கவே இவ்வாறு தெரிவித்துள்ளார் 

குறித்த சந்திப்பானது இன்று முற்பகல் 9 மணிக்கு  இடம்பெறவுள்ளதுடன், இதன்போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

மேலும்  சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவது குறித்து அமைச்சுகளின் செயலாளர்களுக்குத் தெளிவுப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு, அரச சொத்துகள் தொடர்பான பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் கொழும்புக்கு அழைப்பு நாட்டின் அனைத்து மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும், மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்களும் கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்றைய தினம் அழைக்கப்பட்டுள்ளனர்.குறித்த விடயம் தொடர்பில்  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L. ரத்நாயக்கவே இவ்வாறு தெரிவித்துள்ளார் குறித்த சந்திப்பானது இன்று முற்பகல் 9 மணிக்கு  இடம்பெறவுள்ளதுடன், இதன்போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும்  சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவது குறித்து அமைச்சுகளின் செயலாளர்களுக்குத் தெளிவுப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு, அரச சொத்துகள் தொடர்பான பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now