பொது மக்களுக்கான துரித சேவையை வழங்குவதற்கு அனைத்து உத்தியோகஸ்தர்களும் உறுதியெடுத்துக் கொள்ளவேண்டும் என வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில், இன்று காலை தேசிய கொடியேற்றி உறுதியெடுத்துக்கொள்ளும் நிகழ்வில் தேசியக் கொடியை ஏற்றிய பின் உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இதுவரை 22 தடவைகள் அரசியல் யாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் புதிய அரசாங்கம் அரசியல் யாப்பு ஒன்றினை கொண்டுவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், புதிய அரசாங்கத்தின் மூன்று கொள்கைகளில் கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் ஊழல் உட்பட அனைத்து கழிவுகளையும் அகற்றவேண்டும் என்றும் தெரிவித்ததுடன் பொது மக்களுக்கான அரச சேவையை வழங்குவதற்கு அனைத்து உத்தியோகஸ்தர்களும் உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக அனைத்து உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கான அரச சேவையை வழங்குவதற்கு அனைத்து உத்தியோகத்தர்களும் உறுதியெடுத்துக்கொள்ள வேண்டும்; பிரபாகரமூர்த்தி வலியுறுத்து. பொது மக்களுக்கான துரித சேவையை வழங்குவதற்கு அனைத்து உத்தியோகஸ்தர்களும் உறுதியெடுத்துக் கொள்ளவேண்டும் என வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி தெரிவித்துள்ளார்.வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில், இன்று காலை தேசிய கொடியேற்றி உறுதியெடுத்துக்கொள்ளும் நிகழ்வில் தேசியக் கொடியை ஏற்றிய பின் உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கையில் இதுவரை 22 தடவைகள் அரசியல் யாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் புதிய அரசாங்கம் அரசியல் யாப்பு ஒன்றினை கொண்டுவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், புதிய அரசாங்கத்தின் மூன்று கொள்கைகளில் கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் ஊழல் உட்பட அனைத்து கழிவுகளையும் அகற்றவேண்டும் என்றும் தெரிவித்ததுடன் பொது மக்களுக்கான அரச சேவையை வழங்குவதற்கு அனைத்து உத்தியோகஸ்தர்களும் உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக அனைத்து உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.