• Nov 22 2024

அனைத்து அரசியல் கட்சிகளும் விடுதலைப்புலிகளுக்கு சமமானவர்களாகும்! மிஹிந்தலை மகாநாயக்க தேரர் சர்ச்சை கருத்து

Chithra / Jan 22nd 2024, 9:23 am
image


அடுத்துவரும் தேர்தல் நாட்டை பாதுகாத்துக்கொள்ள கிடைத்த இறுதி சந்தர்ப்பமாகும். அதனால் அரசியல் வாதிகளிடம் தொடர்ந்து ஏமாறாமல் உண்மையாக சேவை செய்யக்கூடியவர்களை தெரிவு செய்து நாட்டை கட்டியெழுப்ப தயாராக வேண்டும் என மிஹிந்தலை மகாநாயக்க தேரர் வளவாஹெங்குணவெவே தம்மரத்ன தெரிவித்தார்.

அத்துடன் இந்த நாட்டை ஆட்சி செய்த அனைத்து அரசியல் கட்சிகளும் விடுதலைப்புலிகளுக்கு சமமானவர்களாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் எதிர்கால நிலைமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

எமது நாடே எமக்கு முக்கியம். அதனால் தற்போது எங்களுக்கு பேசிக்கொண்டிருக்க நேரம் இல்லை. அதேபோன்று போராட்டம் செய்யவோ ஹர்த்தால் மேற்கொள்ளவோ எமக்கு தேவையில்லை.

தற்போது எமக்கு தேவையாக இருப்பது,  சிறந்த சிந்தனையும் இலக்கும் உள்ள இளைஞர்களாகும். 

நூற்றுக்கு ஆயிரம்  ஆட்சியாளர்கள் இன்று மக்கள் பக்கம் இல்லை. 

அதனால்தான் ஆட்சியாளர்கள் கிராமங்களுக்கு செல்லும்போது அந்த பிரதேச மக்கள் அவர்களை விரட்டுகின்றார்கள்.

எதிர்வரும் தேர்தல் எமக்கு இறுதி சந்தர்ப்பமாகும். இதனை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தாவிட்டால் எமக்கு இனிஒருபோதும் சந்தர்ப்பம் கிடைக்காது.

அத்துடன் 75 வருடங்களாக அரசியல்வாதிகள் எங்களிடம் வேலை வாங்கினார்கள். அதனால் தற்போது நாங்கள் எங்களுக்கு தேவையான ஒருவரை தெரிவுசெய்துகொள்ள வேண்டும்.

இந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் விடுதலைப் புலிகளுக்கு சமமானவர்கள். ஏனெனில் இவர்கள் அனைவரும் இந்த நாட்டை அழித்தவர்கள்.

அதனால் நாட்டு மக்கள் அனைவரும் இந்த அரசியல்வாதிகளுக்கு ஏமாந்ததுபோதும் இனியும் ஏமாறக்கூடாது. அதனால்  சிறந்த இளைஞர்கள் குழுவை இணைத்துக்கொண்டு நாட்டை பாதுகாக்கும் நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்ள வேண்டும்.  என்றார். 

அனைத்து அரசியல் கட்சிகளும் விடுதலைப்புலிகளுக்கு சமமானவர்களாகும் மிஹிந்தலை மகாநாயக்க தேரர் சர்ச்சை கருத்து அடுத்துவரும் தேர்தல் நாட்டை பாதுகாத்துக்கொள்ள கிடைத்த இறுதி சந்தர்ப்பமாகும். அதனால் அரசியல் வாதிகளிடம் தொடர்ந்து ஏமாறாமல் உண்மையாக சேவை செய்யக்கூடியவர்களை தெரிவு செய்து நாட்டை கட்டியெழுப்ப தயாராக வேண்டும் என மிஹிந்தலை மகாநாயக்க தேரர் வளவாஹெங்குணவெவே தம்மரத்ன தெரிவித்தார்.அத்துடன் இந்த நாட்டை ஆட்சி செய்த அனைத்து அரசியல் கட்சிகளும் விடுதலைப்புலிகளுக்கு சமமானவர்களாகும் எனவும் அவர் தெரிவித்தார்.நாட்டின் எதிர்கால நிலைமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.எமது நாடே எமக்கு முக்கியம். அதனால் தற்போது எங்களுக்கு பேசிக்கொண்டிருக்க நேரம் இல்லை. அதேபோன்று போராட்டம் செய்யவோ ஹர்த்தால் மேற்கொள்ளவோ எமக்கு தேவையில்லை.தற்போது எமக்கு தேவையாக இருப்பது,  சிறந்த சிந்தனையும் இலக்கும் உள்ள இளைஞர்களாகும். நூற்றுக்கு ஆயிரம்  ஆட்சியாளர்கள் இன்று மக்கள் பக்கம் இல்லை. அதனால்தான் ஆட்சியாளர்கள் கிராமங்களுக்கு செல்லும்போது அந்த பிரதேச மக்கள் அவர்களை விரட்டுகின்றார்கள்.எதிர்வரும் தேர்தல் எமக்கு இறுதி சந்தர்ப்பமாகும். இதனை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தாவிட்டால் எமக்கு இனிஒருபோதும் சந்தர்ப்பம் கிடைக்காது.அத்துடன் 75 வருடங்களாக அரசியல்வாதிகள் எங்களிடம் வேலை வாங்கினார்கள். அதனால் தற்போது நாங்கள் எங்களுக்கு தேவையான ஒருவரை தெரிவுசெய்துகொள்ள வேண்டும்.இந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் விடுதலைப் புலிகளுக்கு சமமானவர்கள். ஏனெனில் இவர்கள் அனைவரும் இந்த நாட்டை அழித்தவர்கள்.அதனால் நாட்டு மக்கள் அனைவரும் இந்த அரசியல்வாதிகளுக்கு ஏமாந்ததுபோதும் இனியும் ஏமாறக்கூடாது. அதனால்  சிறந்த இளைஞர்கள் குழுவை இணைத்துக்கொண்டு நாட்டை பாதுகாக்கும் நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்ள வேண்டும்.  என்றார். 

Advertisement

Advertisement

Advertisement