• Oct 18 2024

பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விகாரையை அமைத்து மக்களிடையே குரோதத்தை ஏற்படுத்திய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்- காண்டீபன் தெரிவிப்பு ! samugammedia

Tamil nila / May 3rd 2023, 8:42 pm
image

Advertisement

பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விகாரையை அமைத்து மக்களிடையே மனக்குரோதத்தை ஏற்படுத்திய    அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கொள்கைப் பரப்புச் செயளாளர் நடராஜர் காண்டீபன் தெரிவித்தார்.

தையிட்டி விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுமக்களின் காணிகளைக் கைப்பற்றி தையிட்டியில் விகாரையொன்று கட்டிமுடிக்கப்பட்டு கலசம் வைக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் விகாரை பற்றிய பிரச்சினை எழுப்பப்பட்டு  கட்டுமான பணிகள் நிறுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கோரிக்கை விடுத்த நிலையிலே கொரோனா காலத்தில் இப் பிரதேசத்தில் மக்களை வர அனுமதிக்காது விகாரையைக் கட்டிமுடித்து கலசம் வைத்துளனர்.

உடனடியாக இந்தக் காணிகள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படுவதுடன்  ஆள் சார் இனப்படுவகாலையைப் புரிந்த இராணுவம் தாயகப் பகுதியிலிருந்து  முற்றுமுழுதாக வெளியேற வேண்டும்.

குறித்த இராணுவத்தால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு பாதுகாப்பு வழங்கும் பொலிசார் உடனடியாக இடமாற்றப்பட வேண்டும். 

ஐ.சி.பி.ஆர் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விகாரையை அமைத்து மக்களிடையே மனக்குரோதத்தை ஏற்படுத்திய   இந்த விகாராதிபதியுட்பட  அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். என்றார்.

பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விகாரையை அமைத்து மக்களிடையே குரோதத்தை ஏற்படுத்திய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்- காண்டீபன் தெரிவிப்பு samugammedia பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விகாரையை அமைத்து மக்களிடையே மனக்குரோதத்தை ஏற்படுத்திய    அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கொள்கைப் பரப்புச் செயளாளர் நடராஜர் காண்டீபன் தெரிவித்தார்.தையிட்டி விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,பொதுமக்களின் காணிகளைக் கைப்பற்றி தையிட்டியில் விகாரையொன்று கட்டிமுடிக்கப்பட்டு கலசம் வைக்கப்பட்டுள்ளது.தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் விகாரை பற்றிய பிரச்சினை எழுப்பப்பட்டு  கட்டுமான பணிகள் நிறுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கோரிக்கை விடுத்த நிலையிலே கொரோனா காலத்தில் இப் பிரதேசத்தில் மக்களை வர அனுமதிக்காது விகாரையைக் கட்டிமுடித்து கலசம் வைத்துளனர்.உடனடியாக இந்தக் காணிகள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படுவதுடன்  ஆள் சார் இனப்படுவகாலையைப் புரிந்த இராணுவம் தாயகப் பகுதியிலிருந்து  முற்றுமுழுதாக வெளியேற வேண்டும்.குறித்த இராணுவத்தால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு பாதுகாப்பு வழங்கும் பொலிசார் உடனடியாக இடமாற்றப்பட வேண்டும். ஐ.சி.பி.ஆர் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விகாரையை அமைத்து மக்களிடையே மனக்குரோதத்தை ஏற்படுத்திய   இந்த விகாராதிபதியுட்பட  அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement