• Nov 21 2025

பொதுநிர்வாக அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றம்

Chithra / Nov 19th 2025, 7:45 pm
image


2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் நான்காவது நாளான இன்று (19) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான செலவுத்தலைப்பு (130) 94 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 

குழு நிலை விவாதத்தின் பின்னர் பி.ப 6.10 மணியளவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குறித்த செலவுத்தலைப்புக்கு வாக்கெடுப்பைக் கோரினார். 

இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த செலவுத்தலைப்புக்கான ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 103 வாக்குகளும், எதிராக 9 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 

குறித்த அமைச்சின் ஏனைய செலவுத் தலைப்புக்கள் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டன.

அத்துடன், இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தொழில் அமைச்சுக்கான செலவுத்தலைப்பு வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழுவை அமைப்பது தொடர்பான பிரேரணையும் அங்கீகரிக்கப்பட்டது.

பொதுநிர்வாக அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றம் 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் நான்காவது நாளான இன்று (19) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான செலவுத்தலைப்பு (130) 94 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. குழு நிலை விவாதத்தின் பின்னர் பி.ப 6.10 மணியளவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குறித்த செலவுத்தலைப்புக்கு வாக்கெடுப்பைக் கோரினார். இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த செலவுத்தலைப்புக்கான ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 103 வாக்குகளும், எதிராக 9 வாக்குகளும் அளிக்கப்பட்டன. குறித்த அமைச்சின் ஏனைய செலவுத் தலைப்புக்கள் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டன.அத்துடன், இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தொழில் அமைச்சுக்கான செலவுத்தலைப்பு வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.இதேவேளை, கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழுவை அமைப்பது தொடர்பான பிரேரணையும் அங்கீகரிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement