• Sep 20 2024

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு..!

Sharmi / Aug 17th 2024, 12:40 pm
image

Advertisement

வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய, மத்திய சுகாதார அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுமார்  100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் காணப்படும் அவசர தேவைகள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் எடுத்துக் கூறியதற்கு அமைய மத்திய சுகாதார அமைச்சுக்கு, கௌரவ ஆளுநரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதற்கமைய, சுமார் நூறு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிதியின் ஊடாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான 500 KW வலுவுடைய மின்பிறப்பாக்கி பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது. 

அத்துடன் வைத்தியசாலை ஊழியர்களுக்கான விடுதி புனரமைப்பு மற்றும் உள்ளக நடைபாதை புனரமைப்பு ஆகிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு. வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய, மத்திய சுகாதார அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுமார்  100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் காணப்படும் அவசர தேவைகள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் எடுத்துக் கூறியதற்கு அமைய மத்திய சுகாதார அமைச்சுக்கு, கௌரவ ஆளுநரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.அதற்கமைய, சுமார் நூறு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் ஊடாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான 500 KW வலுவுடைய மின்பிறப்பாக்கி பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது. அத்துடன் வைத்தியசாலை ஊழியர்களுக்கான விடுதி புனரமைப்பு மற்றும் உள்ளக நடைபாதை புனரமைப்பு ஆகிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement