• Nov 21 2024

அதிகரிக்கப்படவுள்ள கொடுப்பனவு..! கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு..!

Sharmi / Jul 29th 2024, 8:34 am
image

தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் எட்டாயிரம் ரூபாவாக அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

புதிய மாணவர்களுக்கான உதவித்தொகையை செப்டெம்பர் மாதம் முதல் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், வரையறுக்கப்பட்ட பயிற்சி பெற்று தற்போது இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு போதாது என்ற நீண்டகால கோரிக்கையின் அடிப்படையில் இந்த வருட ஆரம்பத்தில் கொடுப்பனவை மூவாயிரம் ரூபாவினால் அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம் எடுத்திருந்தது.

எனினும் அமைச்சின் போதிய நிதி ஒதுக்கீடுகள் இல்லாததால், அந்த முடிவை இது வரை அமுல்படுத்த முடியவில்லை.

ஆனால் கிடைக்கும் பணத்தை நிர்வகித்து கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதிகரிக்கப்படவுள்ள கொடுப்பனவு. கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு. தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் எட்டாயிரம் ரூபாவாக அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.புதிய மாணவர்களுக்கான உதவித்தொகையை செப்டெம்பர் மாதம் முதல் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், வரையறுக்கப்பட்ட பயிற்சி பெற்று தற்போது இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு போதாது என்ற நீண்டகால கோரிக்கையின் அடிப்படையில் இந்த வருட ஆரம்பத்தில் கொடுப்பனவை மூவாயிரம் ரூபாவினால் அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம் எடுத்திருந்தது.எனினும் அமைச்சின் போதிய நிதி ஒதுக்கீடுகள் இல்லாததால், அந்த முடிவை இது வரை அமுல்படுத்த முடியவில்லை.ஆனால் கிடைக்கும் பணத்தை நிர்வகித்து கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement