• Apr 21 2025

அம்பலாங்கொடை இரட்டைக் கொலைச் சம்பவம் – சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்

Tharmini / Feb 26th 2025, 11:33 am
image

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவின் ஊரவத்த பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவின் ஊரவத்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆண் ஒருவர் மற்றும் பெண் ஒருவர் மீதும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றதுடன், சந்தேகநபர்களைக் கைது செய்ய அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன்படி, இந்தக் குற்றத்திற்கு உதவியதற்காக கைது செய்யத் தேடப்பட்ட வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று (25) சட்டத்தரணி மூலம் பலபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் மார்ச் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொல்ஹுன்னாவ, பட்டபொல பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

குற்றச் செயலுக்குப் பிறகு தப்பிச் செல்ல சந்தேக நபர்கள் பயன்படுத்திய காரின் சாரதியாக இவர் செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அம்பலாங்கொடை இரட்டைக் கொலைச் சம்பவம் – சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர் அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவின் ஊரவத்த பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவின் ஊரவத்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆண் ஒருவர் மற்றும் பெண் ஒருவர் மீதும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருந்தனர்.துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றதுடன், சந்தேகநபர்களைக் கைது செய்ய அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.அதன்படி, இந்தக் குற்றத்திற்கு உதவியதற்காக கைது செய்யத் தேடப்பட்ட வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று (25) சட்டத்தரணி மூலம் பலபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் மார்ச் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொல்ஹுன்னாவ, பட்டபொல பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.குற்றச் செயலுக்குப் பிறகு தப்பிச் செல்ல சந்தேக நபர்கள் பயன்படுத்திய காரின் சாரதியாக இவர் செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement