• Mar 14 2026

பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நிபந்தனைகளில் திருத்தம்

Chithra / Feb 17th 2026, 9:12 pm
image

 

நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காகத் திறந்த அடிப்படையில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நிபந்தனைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2474/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, விண்ணப்பதாரிகள் தமது பட்டத் தகைமைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டிய இறுதித் திகதி 2026 மார்ச் 5 ஆம் திகதி என நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (16) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதையடுத்து, வர்த்தமானியில் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன் மூலம் பரீட்சைக்குத் தோற்றவுள்ள அதிகளவான பட்டதாரிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நிபந்தனைகளில் திருத்தம்  நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காகத் திறந்த அடிப்படையில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நிபந்தனைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2474/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, விண்ணப்பதாரிகள் தமது பட்டத் தகைமைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டிய இறுதித் திகதி 2026 மார்ச் 5 ஆம் திகதி என நீடிக்கப்பட்டுள்ளது.நேற்று (16) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதையடுத்து, வர்த்தமானியில் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.இதன் மூலம் பரீட்சைக்குத் தோற்றவுள்ள அதிகளவான பட்டதாரிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement