• Apr 16 2026

ஈரானின் 16 ஏவுகணைப் படகுகளை அழித்த அமெரிக்கா; ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் பயங்கரம்

Chithra / Mar 11th 2026, 8:16 am
image


ஹோர்முஸ் நீரிணைக்கு  அருகில் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 16 கப்பல்கள் உட்பட பல படகுகளை அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் அறிவித்துள்ளது.

 

இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளிக் காட்சிகளை அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கொண்டு செல்லப்படும் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில், ஈரான் தனது போர்க்கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளதாகக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் போர்க்கப்பல்களை வைத்திருந்தால், அவற்றை உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'Truth Social' கணக்கில் பதிவிட்டுள்ளார்.


இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் அமெரிக்கா அல்லது அதன் நட்பு நாடுகளின் போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படைத் தளபதி அலைரேசா தங்சிரி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இந்தநிலையில் அமெரிக்க இராணுவப் பாதுகாப்புடன் எண்ணெய் கப்பல் ஒன்று ஹார்முஸ் நீரிணையை கடந்ததாகக் கூறப்படும் தகவலை ஈரான் முற்றாக மறுத்துள்ளது. அந்தக் கூற்று முற்றிலும் பொய்யானது என கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.


உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியமான ஒரு பாதையாக ஹோர்முஸ் நீரிணை கருதப்படுகிறது. 


ஈரானின் 16 ஏவுகணைப் படகுகளை அழித்த அமெரிக்கா; ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் பயங்கரம் ஹோர்முஸ் நீரிணைக்கு  அருகில் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 16 கப்பல்கள் உட்பட பல படகுகளை அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளிக் காட்சிகளை அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கொண்டு செல்லப்படும் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில், ஈரான் தனது போர்க்கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளதாகக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் போர்க்கப்பல்களை வைத்திருந்தால், அவற்றை உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'Truth Social' கணக்கில் பதிவிட்டுள்ளார்.இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் அமெரிக்கா அல்லது அதன் நட்பு நாடுகளின் போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படைத் தளபதி அலைரேசா தங்சிரி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்தநிலையில் அமெரிக்க இராணுவப் பாதுகாப்புடன் எண்ணெய் கப்பல் ஒன்று ஹார்முஸ் நீரிணையை கடந்ததாகக் கூறப்படும் தகவலை ஈரான் முற்றாக மறுத்துள்ளது. அந்தக் கூற்று முற்றிலும் பொய்யானது என கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியமான ஒரு பாதையாக ஹோர்முஸ் நீரிணை கருதப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement