• Oct 15 2026

அமெரிக்கா தண்டிக்கப்பட வேண்டும்-ஈரான் கடும் எச்சரிக்கை

Ziya / Oct 15th 2026, 9:28 am
image

அமெரிக்கா அளித்த வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் மீறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், ஈரானின் கோரிக்கைகளை ஏற்கும் வகையில் அமெரிக்கா தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.


தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், அமெரிக்காவுடனான ஒப்பந்தம் மட்டுமே எதிர்காலத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படாது என்பதற்கான உத்தரவாதமாக இருக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.


மேலும், ஈரான் தனது பாதுகாப்புத் தயார்நிலையை வலுப்படுத்துவதுடன், ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அமெரிக்கா தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டு, ஈரான் மக்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


இந்தக் கருத்துகள், ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முட்டுக்கட்டைகளைச் சந்தித்து வரும் சூழலில் வெளியாகியுள்ளன. ஈரானின் கோரிக்கைகளுக்கு அமெரிக்கா அளித்த பதில் போதுமானதாக இல்லை என ஈரான் தரப்பு ஏற்கெனவே தெரிவித்துள்ளது.


இராணுவத் தயார்நிலையையும் பேச்சுவார்த்தைகளையும் ஒருசேர முன்னெடுக்கப்போவதாக ஈரான் கூறும் நிலையில், அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றத்தைத் தணிக்க இரு தரப்பும் உடன்பாட்டை எட்டுமா என்பதே சர்வதேச அளவில் கவனிக்கப்படுகிறது.

அமெரிக்கா தண்டிக்கப்பட வேண்டும்-ஈரான் கடும் எச்சரிக்கை அமெரிக்கா அளித்த வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் மீறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், ஈரானின் கோரிக்கைகளை ஏற்கும் வகையில் அமெரிக்கா தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், அமெரிக்காவுடனான ஒப்பந்தம் மட்டுமே எதிர்காலத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படாது என்பதற்கான உத்தரவாதமாக இருக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.மேலும், ஈரான் தனது பாதுகாப்புத் தயார்நிலையை வலுப்படுத்துவதுடன், ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அமெரிக்கா தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டு, ஈரான் மக்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.இந்தக் கருத்துகள், ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முட்டுக்கட்டைகளைச் சந்தித்து வரும் சூழலில் வெளியாகியுள்ளன. ஈரானின் கோரிக்கைகளுக்கு அமெரிக்கா அளித்த பதில் போதுமானதாக இல்லை என ஈரான் தரப்பு ஏற்கெனவே தெரிவித்துள்ளது.இராணுவத் தயார்நிலையையும் பேச்சுவார்த்தைகளையும் ஒருசேர முன்னெடுக்கப்போவதாக ஈரான் கூறும் நிலையில், அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றத்தைத் தணிக்க இரு தரப்பும் உடன்பாட்டை எட்டுமா என்பதே சர்வதேச அளவில் கவனிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement