• Jan 16 2026

நிவாரணப் பணிகளுக்காக இலங்கை வந்த அமெரிக்க விமானங்கள்!

Chithra / Dec 7th 2025, 6:36 pm
image


'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க விமானப்படையின் இரண்டு சி-130 ரக விமானங்கள் இன்று இலங்கையை வந்தடைந்தன.


பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்த விமானங்கள் விசேட பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய திறன்களுடன் வந்துள்ளன.


இந்தத் குழுமத்தில் "374வது ஏர்லிஃப்ட் விங், 36வது கன்டின்ஜென்சி ரெஸ்பான்ஸ் குரூப் மற்றும் III மரைன் எக்ஸ்பெடிஷனரி ஃபோர்ஸ்" ஆகியவற்றின் குழுக்கள் உள்ளடங்குகின்றன.


இவர்கள், இலங்கை விமானப்படைப் பிரிவுகளுடன் நெருக்கமாக இணைந்து, விமானப் போக்குவரத்து, தளவாடங்கள் மற்றும் விரைவான மீட்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 


கட்டுநாயக்க இலங்கை விமானப்படைத் தளத்தை வந்தடைந்த அமெரிக்கக் குழுவினரை, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்  ஜூலி சங், பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருணா ஜெயசேகர, இலங்கை விமானப்படை சார்பில், திட்டமிடல் பணிப்பாளர் நாயகம், ஏர் வைஸ் மார்ஷல் தேசப்பிரிய சில்வா ஆகியோருடன் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் வரவேற்றனர்.


நிவாரணப் பணிகளுக்காக இலங்கை வந்த அமெரிக்க விமானங்கள் 'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க விமானப்படையின் இரண்டு சி-130 ரக விமானங்கள் இன்று இலங்கையை வந்தடைந்தன.பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்த விமானங்கள் விசேட பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய திறன்களுடன் வந்துள்ளன.இந்தத் குழுமத்தில் "374வது ஏர்லிஃப்ட் விங், 36வது கன்டின்ஜென்சி ரெஸ்பான்ஸ் குரூப் மற்றும் III மரைன் எக்ஸ்பெடிஷனரி ஃபோர்ஸ்" ஆகியவற்றின் குழுக்கள் உள்ளடங்குகின்றன.இவர்கள், இலங்கை விமானப்படைப் பிரிவுகளுடன் நெருக்கமாக இணைந்து, விமானப் போக்குவரத்து, தளவாடங்கள் மற்றும் விரைவான மீட்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க இலங்கை விமானப்படைத் தளத்தை வந்தடைந்த அமெரிக்கக் குழுவினரை, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்  ஜூலி சங், பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருணா ஜெயசேகர, இலங்கை விமானப்படை சார்பில், திட்டமிடல் பணிப்பாளர் நாயகம், ஏர் வைஸ் மார்ஷல் தேசப்பிரிய சில்வா ஆகியோருடன் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் வரவேற்றனர்.

Advertisement

Advertisement

Advertisement