• Jul 06 2025

அமி உபுல் மீதான துப்பாக்கிச்சூடு – விசாரணைகளுக்காக 8 பொலிஸ் குழுக்கள்

Chithra / Jul 6th 2025, 1:16 pm
image

 

பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கூட்டாளியான அமி உபுல்  துப்பாக்கிச்சூட்டில் கொலைசெய்யப்பட்ட சம்பவம் குறித்து 8 பொலிஸ் குழுக்கள் விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த அமி உபுல்  என்பவரின் கைபேசியில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன், இதுவரை 10 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

ராகம, பட்டுவத்த பகுதியில் கடந்த வியாழக்கிழமை (3) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில், பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கூட்டாளியான அமி உபுல் என்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பொலிஸாரின் கூற்றுப்படி, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் முச்சக்கரவண்டியில் வந்து படுவத்த வீதியில் அமைந்துள்ள வீட்டிற்குள் இருந்த அமி உபுல்  மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, பின்னர் தப்பிச் சென்றனர்.

படுவத்தேயைச் சேர்ந்த 45 வயதான முன்னாள் இராணுவ வீரர் என அடையாளம் காணப்பட்ட அமி உபுல்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

முதற்கட்ட விசாரணைகளில், அமி உபுல் குற்றச் செயல்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்பது தெரியவந்துள்ளது.

அமி உபுல் மீதான துப்பாக்கிச்சூடு – விசாரணைகளுக்காக 8 பொலிஸ் குழுக்கள்  பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கூட்டாளியான அமி உபுல்  துப்பாக்கிச்சூட்டில் கொலைசெய்யப்பட்ட சம்பவம் குறித்து 8 பொலிஸ் குழுக்கள் விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ளன.உயிரிழந்த அமி உபுல்  என்பவரின் கைபேசியில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன், இதுவரை 10 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.ராகம, பட்டுவத்த பகுதியில் கடந்த வியாழக்கிழமை (3) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில், பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கூட்டாளியான அமி உபுல் என்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.பொலிஸாரின் கூற்றுப்படி, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் முச்சக்கரவண்டியில் வந்து படுவத்த வீதியில் அமைந்துள்ள வீட்டிற்குள் இருந்த அமி உபுல்  மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, பின்னர் தப்பிச் சென்றனர்.படுவத்தேயைச் சேர்ந்த 45 வயதான முன்னாள் இராணுவ வீரர் என அடையாளம் காணப்பட்ட அமி உபுல்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.முதற்கட்ட விசாரணைகளில், அமி உபுல் குற்றச் செயல்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்பது தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement