• Feb 05 2025

சுதந்திர தினத்தை முன்னிட்டு 285 கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு

Chithra / Feb 4th 2025, 7:06 am
image

 

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 285 கைதிகள் இன்றையதினம்(04) விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளனர். 

சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட பொது மன்னிப்புக்கு தகுதியுடைய 279 ஆண் கைதிகளும் 6 பெண் கைதிகளும் உள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வரும் இந்தக் கைதிகள் நாளை காலை பத்து மணிக்கும், நண்பகல் பன்னிரண்டு மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு 285 கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு  இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 285 கைதிகள் இன்றையதினம்(04) விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளனர். சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.அதன்படி, தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட பொது மன்னிப்புக்கு தகுதியுடைய 279 ஆண் கைதிகளும் 6 பெண் கைதிகளும் உள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வரும் இந்தக் கைதிகள் நாளை காலை பத்து மணிக்கும், நண்பகல் பன்னிரண்டு மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement