குயில்வத்தை ஸ்ரீ சிவானந்தா கல்லூரியின் நீண்ட நாள் கனவுத் திட்டம் ஒன்றை நனவாக்கும் வகையில், அக்கல்லூரியின் பழைய மாணவரான பாக்கியநாதன் ஜெனிபட் அவர்கள் தனது சொந்தப் பங்களிப்பை வழங்கியுள்ளார்.
கல்லூரியின் மைதான அபிவிருத்தி அல்லது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட நிலத்தை சீரமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கென கனரக எந்திரங்கள் (JCB) பயன்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தனது பழைய பாடசாலையின் வளர்ச்சிக்காக, ஸ்ரீ சிவானந்தா கல்லூரியில் 2001 மற்றும் 2004 ஆண்டுகளில் கல்வி பயின்ற மாணவர்களின் நட்பின் அடையாளமாகவும். திரு ஜெனிபட் மற்றும் அவர்களின் நண்பர்கள் இணைந்து முன்னெடுக்கும் வேலை திட்டமாகவும் இப்ப பாடசாலையின் கனவு மைதானத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் இன்றைய தினம் பாடசாலையின் அதிபர் தலைமையில் ஹட்டன் கல்வி வலயஅதிகாரிகள் பழைய மாணவர்கள் தோட்ட நிர்வாகத்தினர் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பாடசாலையில் நிலவி வரும் விளையாட்டு மைதான பற்றாக்குறை இதன் மூலம் நிவர்த்தி செய்யப்படும் என பழைய மாணவர்கள் தெரிவித்தனர்.
குயில்வத்தை ஸ்ரீ சிவானந்தா கல்லூரியின் கனவை நனவாக்கிய பழைய மாணவர் குயில்வத்தை ஸ்ரீ சிவானந்தா கல்லூரியின் நீண்ட நாள் கனவுத் திட்டம் ஒன்றை நனவாக்கும் வகையில், அக்கல்லூரியின் பழைய மாணவரான பாக்கியநாதன் ஜெனிபட் அவர்கள் தனது சொந்தப் பங்களிப்பை வழங்கியுள்ளார்.கல்லூரியின் மைதான அபிவிருத்தி அல்லது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட நிலத்தை சீரமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதற்கென கனரக எந்திரங்கள் (JCB) பயன்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.தனது பழைய பாடசாலையின் வளர்ச்சிக்காக, ஸ்ரீ சிவானந்தா கல்லூரியில் 2001 மற்றும் 2004 ஆண்டுகளில் கல்வி பயின்ற மாணவர்களின் நட்பின் அடையாளமாகவும். திரு ஜெனிபட் மற்றும் அவர்களின் நண்பர்கள் இணைந்து முன்னெடுக்கும் வேலை திட்டமாகவும் இப்ப பாடசாலையின் கனவு மைதானத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் இன்றைய தினம் பாடசாலையின் அதிபர் தலைமையில் ஹட்டன் கல்வி வலயஅதிகாரிகள் பழைய மாணவர்கள் தோட்ட நிர்வாகத்தினர் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.பாடசாலையில் நிலவி வரும் விளையாட்டு மைதான பற்றாக்குறை இதன் மூலம் நிவர்த்தி செய்யப்படும் என பழைய மாணவர்கள் தெரிவித்தனர்.