• Nov 12 2024

நிகழ்நிலை காப்பு சட்டத்தால் தமிழ் மக்களின் போராட்டங்களை நசுக்க முயற்சி...! லீலாவதி குற்றச்சாட்டு...!samugammedia

Sharmi / Feb 1st 2024, 2:41 pm
image

நிகழ்நிலை காப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்பு சட்டங்கள் மிகவும் திட்டமிட்ட முறையில் தமிழ் மக்களின் குரல்வளையை நசுக்கவும் தமிழ் மக்களின் போராட்டங்களை நசிக்கவுமாக கொண்டுவரப்பட்ட சட்டங்களாக காணப்படுவதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராசா தெரிவித்துள்ளார்.

யாழ். கொடிகாமத்தில் இன்று(01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிகழ்நிலை காப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்பு சட்டங்கள் மிகவும் திட்டமிட்ட முறையில் தமிழ் மக்களின் குரல்வளையை நசுக்கவும் தமிழ் மக்களின் போராட்டங்களை நசிக்கவுமாக கொண்டுவரப்பட்ட சட்டங்களாக காணப்படுகின்றது.

இந்த சட்டங்களின் தாக்கங்கள் தொடர்பில்  அறிந்து நாம் ஆரம்பத்திலேயே அதற்கான எதிர்ப்பு போராட்டத்தை நடாத்தியிருக்க வேண்டும்.

குறித்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரியளவில் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

தென்பகுதியை பொறுத்தவரையில்  கடந்த சில நாட்களாக இதற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெறுவதாக அறிகின்றோம்.

இரு சட்டங்களும் சுயமாக போராடும் இனத்தின் மீது அடக்குமுறையுடன்  குரல்வளையை நசுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமாக காணப்படுவதுடன் அவர்களை எவ்வித விசாரணைகளும் இன்றி கைது செய்ய முடியும்.

இதன் மூலம் எமது போராட்டங்களை வெளி உலகிற்கு கொண்டுசெல்லும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைச் சட்டமே நிகழ் நிலை காப்பு.குறித்த இரு சட்டங்களும் மக்களின் சுதந்திரங்களை பறிக்கும் சட்டங்கள். 

உண்மையாகவே நாட்டு மக்கள் சுதந்திரமாக இருக்கின்றார்கள் என்றால் சுதந்திரம் இல்லாத நிலையில் கூட இப்படியான சுதந்திரத்தை அடக்கும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

சிங்கள அரசாங்கத்தில் ஆட்சி செய்யும் அனைத்து கட்சிகளுமே தமிழர்கள் மீதான போராட்டத்தை அடக்குவதில் தாம் ஆட்சியில் உள்ள போது ஒரு விதமாகவும் தாம் ஆட்சியில் இல்லாத போது வேறொரு விதமாகவும் நடந்து கொள்கின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் குறித்த சட்டத்திற்கு எதிராக  பாரிய போராட்டத்தை முன்னெடுத்தார். அதன் போது கூட அடக்குமுறை பாவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கே அப்படி என்றால் எங்கள் நிலை?

குறித்த இரு சட்டங்களுக்கும் எதிராக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சர்வதேச ரீதியில் ஒரு எதிர்ப்பு பிரச்சாரத்தை செய்து அதற்கு ஒரு மாற்றத்தை கொண்டுவருவதற்கு முயற்சிக்க வேண்டும்.

குறித்த சட்டத்தை திருத்தம் செய்யுமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் அழுத்தம் கொடுத்திருக்கின்றது.

அதேபோல எங்களது பிரதிநிதிகளும் அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.







நிகழ்நிலை காப்பு சட்டத்தால் தமிழ் மக்களின் போராட்டங்களை நசுக்க முயற்சி. லீலாவதி குற்றச்சாட்டு.samugammedia நிகழ்நிலை காப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்பு சட்டங்கள் மிகவும் திட்டமிட்ட முறையில் தமிழ் மக்களின் குரல்வளையை நசுக்கவும் தமிழ் மக்களின் போராட்டங்களை நசிக்கவுமாக கொண்டுவரப்பட்ட சட்டங்களாக காணப்படுவதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராசா தெரிவித்துள்ளார்.யாழ். கொடிகாமத்தில் இன்று(01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,நிகழ்நிலை காப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்பு சட்டங்கள் மிகவும் திட்டமிட்ட முறையில் தமிழ் மக்களின் குரல்வளையை நசுக்கவும் தமிழ் மக்களின் போராட்டங்களை நசிக்கவுமாக கொண்டுவரப்பட்ட சட்டங்களாக காணப்படுகின்றது.இந்த சட்டங்களின் தாக்கங்கள் தொடர்பில்  அறிந்து நாம் ஆரம்பத்திலேயே அதற்கான எதிர்ப்பு போராட்டத்தை நடாத்தியிருக்க வேண்டும்.குறித்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரியளவில் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.தென்பகுதியை பொறுத்தவரையில்  கடந்த சில நாட்களாக இதற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெறுவதாக அறிகின்றோம்.இரு சட்டங்களும் சுயமாக போராடும் இனத்தின் மீது அடக்குமுறையுடன்  குரல்வளையை நசுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமாக காணப்படுவதுடன் அவர்களை எவ்வித விசாரணைகளும் இன்றி கைது செய்ய முடியும்.இதன் மூலம் எமது போராட்டங்களை வெளி உலகிற்கு கொண்டுசெல்லும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைச் சட்டமே நிகழ் நிலை காப்பு.குறித்த இரு சட்டங்களும் மக்களின் சுதந்திரங்களை பறிக்கும் சட்டங்கள். உண்மையாகவே நாட்டு மக்கள் சுதந்திரமாக இருக்கின்றார்கள் என்றால் சுதந்திரம் இல்லாத நிலையில் கூட இப்படியான சுதந்திரத்தை அடக்கும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.சிங்கள அரசாங்கத்தில் ஆட்சி செய்யும் அனைத்து கட்சிகளுமே தமிழர்கள் மீதான போராட்டத்தை அடக்குவதில் தாம் ஆட்சியில் உள்ள போது ஒரு விதமாகவும் தாம் ஆட்சியில் இல்லாத போது வேறொரு விதமாகவும் நடந்து கொள்கின்றனர்.எதிர்க்கட்சித் தலைவர் குறித்த சட்டத்திற்கு எதிராக  பாரிய போராட்டத்தை முன்னெடுத்தார். அதன் போது கூட அடக்குமுறை பாவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கே அப்படி என்றால் எங்கள் நிலைகுறித்த இரு சட்டங்களுக்கும் எதிராக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சர்வதேச ரீதியில் ஒரு எதிர்ப்பு பிரச்சாரத்தை செய்து அதற்கு ஒரு மாற்றத்தை கொண்டுவருவதற்கு முயற்சிக்க வேண்டும்.குறித்த சட்டத்தை திருத்தம் செய்யுமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் அழுத்தம் கொடுத்திருக்கின்றது.அதேபோல எங்களது பிரதிநிதிகளும் அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement