திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயல பகுதிக்குட்பட்ட சிராஜ் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கான போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டலில் இடம் பெற்ற குறித்த நிகழ்வானது No drugs நாங்கள் youth " போதை பொருள் அற்ற இளைஞர் தலைமுறை " என்ற தொனிப் பொருளின் கீழ் நேற்று (19) பாடசாலையில் இடம் பெற்றது.
போதை பொருள் தடுப்புக்காக பாடசாலை மாணவர்கள், மாணவ தலைவர்கள மற்றும் இளைஞர் தலைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
போதைப் பொருளை ஒழிப்பதும் பாவனைகளை கட்டுப்படுத்தவும், இளைஞர்களின் ஒத்துழைப்பு மற்றும் சமூக மட்டத்திலான ஒத்துழைப்புக்கள் தொடர்பிலும் இவ் நிகழ்வில் விரிவாக பேசப்பட்டது.
இதில் சமுதாயம் சார் சீர் திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் B.ஹம்சபாலன்,உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச்.முகம்மது றியாத்,இளைஞர் சேவை அதிகாரி ஐ.ஜாபீர்,பாடசாலை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருமலையில் போதை ஒழிப்பு தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு.samugammedia திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயல பகுதிக்குட்பட்ட சிராஜ் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கான போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டலில் இடம் பெற்ற குறித்த நிகழ்வானது No drugs நாங்கள் youth " போதை பொருள் அற்ற இளைஞர் தலைமுறை " என்ற தொனிப் பொருளின் கீழ் நேற்று (19) பாடசாலையில் இடம் பெற்றது. போதை பொருள் தடுப்புக்காக பாடசாலை மாணவர்கள், மாணவ தலைவர்கள மற்றும் இளைஞர் தலைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.போதைப் பொருளை ஒழிப்பதும் பாவனைகளை கட்டுப்படுத்தவும், இளைஞர்களின் ஒத்துழைப்பு மற்றும் சமூக மட்டத்திலான ஒத்துழைப்புக்கள் தொடர்பிலும் இவ் நிகழ்வில் விரிவாக பேசப்பட்டது. இதில் சமுதாயம் சார் சீர் திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் B.ஹம்சபாலன்,உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச்.முகம்மது றியாத்,இளைஞர் சேவை அதிகாரி ஐ.ஜாபீர்,பாடசாலை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.