• Apr 02 2025

யாழில் விபத்தில் படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு!

Tharmini / Dec 21st 2024, 9:17 pm
image

கார்த்திகை (14) விளக்கீடு தினத்தன்று மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் இன்று (21) உயிரிழந்துள்ளார். 

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தையா சிவனேசன் (வயது 80) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் சண்டிலிப்பாயில் இருந்து சுழிபுரம் நோக்கி இரவுவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவேளை, எதிரே வந்த வாகனத்தின் வெளிச்சம் இவரது கண்ணை தாக்கியமையால் மோட்டார் சைக்கிளுடன் பாலத்தினுள் விழுந்துள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (21) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். 

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


யாழில் விபத்தில் படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு கார்த்திகை (14) விளக்கீடு தினத்தன்று மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் இன்று (21) உயிரிழந்துள்ளார். சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தையா சிவனேசன் (வயது 80) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் சண்டிலிப்பாயில் இருந்து சுழிபுரம் நோக்கி இரவுவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவேளை, எதிரே வந்த வாகனத்தின் வெளிச்சம் இவரது கண்ணை தாக்கியமையால் மோட்டார் சைக்கிளுடன் பாலத்தினுள் விழுந்துள்ளார்.இதன்போது படுகாயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (21) உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement