கந்தளாய் - வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயிலியடி பனிச்சை ஆறு கிராமத்தில் புகுந்த காட்டு யானை, விவசாயி ஒருவரின் 15 ஆண்டுகால உழைப்பை ஒரே இரவில் தரைமட்டமாக்கியுள்ளது.
குறித்த காட்டு யானை மிக நீண்டகாலமாக இப்பகுதியில் அட்டகாசம் செய்து வருகின்றது.
பகல் நேரங்களில் மணியரசன் குளத்தின் நடுவே நின்றுகொள்ளும் இந்த யானை, இரவு 10 மணியானதும் கிராமத்திற்குள் ஊடுருவுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
இதனால் மக்கள் மாலை வேளைகளுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வரவும், தமது தோட்டங்களுக்குச் செல்லவும் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த 25 ஆம் திகதி இரவு கிராமத்திற்குள் புகுந்த யானை, அங்குள்ள விவசாயி ஒருவரின் தென்னந்தோட்டத்தில் புகுந்து கோரத் தாண்டவமாடியுள்ளது.
இதில் 15 வருடங்களாக பராமரித்து வளர்க்கப்பட்ட, பலன் தரக்கூடிய 12-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் அடியோடு சாய்த்துச் சிதைக்கப்பட்டுள்ளன.
இந்த அழிவு குறித்து பாதிக்கப்பட்ட விவசாயி, கிண்ணியா ஆயிலியடி கிராம சேவகர் மற்றும் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் வழங்கியுள்ளார். இருப்பினும், இதுவரை எந்தவொரு அதிகாரியும் நேரில் வந்து சேதங்களைப் பார்வையிடவோ, பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவோ இல்லை என அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ச்சியாக அச்சுறுத்தி வரும் இந்தக் காட்டு யானையை இப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய நஷ்டஈட்டை அரசு பெற்றுத் தர வேண்டும் எனவும் மக்கள் அவசரமாகக் கோரிக்கை விடுக்கின்றனர்.
மணியரசன் குளத்தில் தஞ்சம் புகுந்து கிராமங்களைச் சூறையாடும் யானை; 15 ஆண்டுகால உழைப்பு ஒரே இரவில் அழிப்பு கந்தளாய் - வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயிலியடி பனிச்சை ஆறு கிராமத்தில் புகுந்த காட்டு யானை, விவசாயி ஒருவரின் 15 ஆண்டுகால உழைப்பை ஒரே இரவில் தரைமட்டமாக்கியுள்ளது.குறித்த காட்டு யானை மிக நீண்டகாலமாக இப்பகுதியில் அட்டகாசம் செய்து வருகின்றது. பகல் நேரங்களில் மணியரசன் குளத்தின் நடுவே நின்றுகொள்ளும் இந்த யானை, இரவு 10 மணியானதும் கிராமத்திற்குள் ஊடுருவுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.இதனால் மக்கள் மாலை வேளைகளுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வரவும், தமது தோட்டங்களுக்குச் செல்லவும் பெரும் அச்சமடைந்துள்ளனர்.கடந்த 25 ஆம் திகதி இரவு கிராமத்திற்குள் புகுந்த யானை, அங்குள்ள விவசாயி ஒருவரின் தென்னந்தோட்டத்தில் புகுந்து கோரத் தாண்டவமாடியுள்ளது. இதில் 15 வருடங்களாக பராமரித்து வளர்க்கப்பட்ட, பலன் தரக்கூடிய 12-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் அடியோடு சாய்த்துச் சிதைக்கப்பட்டுள்ளன.இந்த அழிவு குறித்து பாதிக்கப்பட்ட விவசாயி, கிண்ணியா ஆயிலியடி கிராம சேவகர் மற்றும் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் வழங்கியுள்ளார். இருப்பினும், இதுவரை எந்தவொரு அதிகாரியும் நேரில் வந்து சேதங்களைப் பார்வையிடவோ, பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவோ இல்லை என அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.தொடர்ச்சியாக அச்சுறுத்தி வரும் இந்தக் காட்டு யானையை இப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய நஷ்டஈட்டை அரசு பெற்றுத் தர வேண்டும் எனவும் மக்கள் அவசரமாகக் கோரிக்கை விடுக்கின்றனர்.