• Nov 25 2024

நற்பிட்டிமுனையில் இடம்பெற்ற சாதனையாளர்கள் கௌரவிக்கும் நிகழ்வு...!samugammedia

Sharmi / Dec 20th 2023, 1:15 pm
image

நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஷனின்   சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா  சவளக்கடை றோயல் காடன் பகுதியிலுள்ள  மர்ஹூம் ஏ.எல்.எம் பளீல் நினைவரங்கில்   நடைபெற்றது.

இதன் போது 2023 ஆண்டு தரம் 5  புலமைப் பரீட்சையில்  வெட்டு புள்ளிக்கு மேல் பெற்ற 12 மாணவர்கள்  , கற்பித்த ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோர்கள் நினைவுச் சின்னம் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஷனின் பணிப்பாளர் சி.எம் ஹலீம்  தலைமையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

விருந்தினர் உரைகள் மற்றும் மாணவர்களது கலை நிகழ்வுகளும் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் சஹூதுல் நஜீம் பிரதம அதிதியாகவும் அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர் எம்.எப்.எம் நிஹாத் கௌரவ விருந்தினராகவும் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஷனின் தவிசாளர் சி.எம் முபீத் மற்றும்  அதிபர்களான எம்.எல்.பதியுதீன்,  சி.எம்.நஜீப்,  திருமதி ஏ.எம்.முனாஸிர் உட்பட மேலும் பலர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் புதிதாக அதிபர் சேவையில் இணைந்து கொண்ட பெண் அதிபர்களான அஸீஸ் றெஜினா ,அப்துல் கபூர் தஸ்லீமா உள்ளிட்ட 2023 ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சையில் சித்தியடைந்த 9 மாணவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




நற்பிட்டிமுனையில் இடம்பெற்ற சாதனையாளர்கள் கௌரவிக்கும் நிகழ்வு.samugammedia நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஷனின்   சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா  சவளக்கடை றோயல் காடன் பகுதியிலுள்ள  மர்ஹூம் ஏ.எல்.எம் பளீல் நினைவரங்கில்   நடைபெற்றது.இதன் போது 2023 ஆண்டு தரம் 5  புலமைப் பரீட்சையில்  வெட்டு புள்ளிக்கு மேல் பெற்ற 12 மாணவர்கள்  , கற்பித்த ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோர்கள் நினைவுச் சின்னம் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஷனின் பணிப்பாளர் சி.எம் ஹலீம்  தலைமையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.விருந்தினர் உரைகள் மற்றும் மாணவர்களது கலை நிகழ்வுகளும் அரங்கேற்றம் செய்யப்பட்டது.கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் சஹூதுல் நஜீம் பிரதம அதிதியாகவும் அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர் எம்.எப்.எம் நிஹாத் கௌரவ விருந்தினராகவும் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஷனின் தவிசாளர் சி.எம் முபீத் மற்றும்  அதிபர்களான எம்.எல்.பதியுதீன்,  சி.எம்.நஜீப்,  திருமதி ஏ.எம்.முனாஸிர் உட்பட மேலும் பலர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.மேலும் இந்நிகழ்வில் புதிதாக அதிபர் சேவையில் இணைந்து கொண்ட பெண் அதிபர்களான அஸீஸ் றெஜினா ,அப்துல் கபூர் தஸ்லீமா உள்ளிட்ட 2023 ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சையில் சித்தியடைந்த 9 மாணவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement