• Nov 17 2024

தேசிய போஷாக்கு மாதத்தின் போஷாக்கான உணவும் நஞ்சற்ற உணவும் என்ற தொனிப்பொருளில் கண்காட்சி...!

Anaath / Jun 13th 2024, 4:28 pm
image

தேசிய போஷாக்கு மாதத்தின் கோஷக்கான உணவும் நஞ்சற்ற உணவும் எனும் கண்காட்சி ஒன்று இன்று இடம்பெற்றது.

கிளிநொச்சி - கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி துவாரகா தலைமையிலேயே  குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

கண்டாவளை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், போசாக்கான நஞ்சற்ற உணவு பழக்கத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதை விழிப்புணர்வூட்டியே  குறித்த கண்காட்சி நிகழ்வு நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி வினோதன், கண்டாவளை பதில் பிரதேச செயலாளர், தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மத குருமார்கள், வர்த்தகர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், கிராம அலுவலர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

தற்பொழுது பலர்  சிறுவயதிலே பல நோய்த்தாக்கங்களுக்கு  உள்ளாகின்றனர். தற்போதைய உணவுப்பழக்கம் மிகவும் ஆரோக்கியமற்றதாக உள்ளமைதான் அதற்கு கரணமாகிறது. 

இனிவரும் காலங்களிலாவது பண்டைய போசாக்கான உணவுப் பழக்கத்தை பயன்படுத்த பளகிக்கொள்ள வேண்டும் எனவும் குறித்த கண்காட்சியில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய போஷாக்கு மாதத்தின் போஷாக்கான உணவும் நஞ்சற்ற உணவும் என்ற தொனிப்பொருளில் கண்காட்சி. தேசிய போஷாக்கு மாதத்தின் கோஷக்கான உணவும் நஞ்சற்ற உணவும் எனும் கண்காட்சி ஒன்று இன்று இடம்பெற்றது.கிளிநொச்சி - கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி துவாரகா தலைமையிலேயே  குறித்த நிகழ்வு இடம்பெற்றது.கண்டாவளை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், போசாக்கான நஞ்சற்ற உணவு பழக்கத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதை விழிப்புணர்வூட்டியே  குறித்த கண்காட்சி நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி வினோதன், கண்டாவளை பதில் பிரதேச செயலாளர், தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மத குருமார்கள், வர்த்தகர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், கிராம அலுவலர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். தற்பொழுது பலர்  சிறுவயதிலே பல நோய்த்தாக்கங்களுக்கு  உள்ளாகின்றனர். தற்போதைய உணவுப்பழக்கம் மிகவும் ஆரோக்கியமற்றதாக உள்ளமைதான் அதற்கு கரணமாகிறது. இனிவரும் காலங்களிலாவது பண்டைய போசாக்கான உணவுப் பழக்கத்தை பயன்படுத்த பளகிக்கொள்ள வேண்டும் எனவும் குறித்த கண்காட்சியில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement