• Dec 13 2024

யாழில் பசுவதையைத் தடுத்த பொலிஸாருக்கு சிவசேனை அமைப்பினர் பாராட்டு...!

Sharmi / Jun 13th 2024, 4:25 pm
image

தென்மராட்சி மட்டுவில் கிராமத்தில் இருந்து துன்னாலைப் பிரதேசத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட பசுக்களை உயிருடன் மீட்டு வந்த சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்னவை  சிவசேனை அமைப்பினர் இன்றையதினம்(13) பாராட்டியிருந்தனர்.

அண்மையில் தென்மராட்சி மட்டுவில் கிராமத்தில் இருந்து  சட்டவிரோதமாக சில பசுக்களை இறைச்சியாக்கும் கும்பல் கடத்திச் சென்றிருந்தது.

இந் நிலையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து விரைந்து செயற்பட்ட சாவகச்சேரிப் பொலிஸார், துன்னாலை காட்டுப் பகுதியில் வைத்து இறைச்சியாக்கப்படவிருந்த பசுக்களை மீட்டதுடன்-பிரதான சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்திருந்தனர்.

இதன்போது சட்டவிரோத கொல்களமும் அடையாளம் காணப்பட்டிருந்தது.

இந்நிலையில் பசுவதையைத் தடுத்த சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை சிவசேனை அமைப்பினர் நேரடியாக தேடிச் சென்று பாராட்டியிருந்தனர்.

இதன்போது, சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தம் கலந்து கொண்டிருந்தார்.






யாழில் பசுவதையைத் தடுத்த பொலிஸாருக்கு சிவசேனை அமைப்பினர் பாராட்டு. தென்மராட்சி மட்டுவில் கிராமத்தில் இருந்து துன்னாலைப் பிரதேசத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட பசுக்களை உயிருடன் மீட்டு வந்த சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்னவை  சிவசேனை அமைப்பினர் இன்றையதினம்(13) பாராட்டியிருந்தனர்.அண்மையில் தென்மராட்சி மட்டுவில் கிராமத்தில் இருந்து  சட்டவிரோதமாக சில பசுக்களை இறைச்சியாக்கும் கும்பல் கடத்திச் சென்றிருந்தது.இந் நிலையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து விரைந்து செயற்பட்ட சாவகச்சேரிப் பொலிஸார், துன்னாலை காட்டுப் பகுதியில் வைத்து இறைச்சியாக்கப்படவிருந்த பசுக்களை மீட்டதுடன்-பிரதான சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்திருந்தனர்.இதன்போது சட்டவிரோத கொல்களமும் அடையாளம் காணப்பட்டிருந்தது.இந்நிலையில் பசுவதையைத் தடுத்த சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை சிவசேனை அமைப்பினர் நேரடியாக தேடிச் சென்று பாராட்டியிருந்தனர்.இதன்போது, சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தம் கலந்து கொண்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement