• Nov 26 2025

வவுனியாவில் தீப்பற்றி எரிந்த சிங்கர் காட்சியறை

Chithra / Nov 25th 2025, 1:11 pm
image


வவுனியா - ஹொரவப்பொத்தான வீதியில் அமைந்திருந்த சிங்கர் இலத்திரனியல் காட்சியறை இன்று காலை தீப்பரவலுக்கு உள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.


காட்சியறையின் மேல் தளத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் தீயே இந்தக் காட்சியறை முழுமையாக எரிந்தமைக்கு காரணம் என கூறப்படுகின்றது.


தீப்பரவல் ஏற்பட்டு சில நிமிடங்களில் மாநகர சபை தீயணைப்பு பிரிவு வருகை தந்து தீயை அணைப்பதற்கு முயற்சித்த போதிலும் அது கட்டுக்கடங்காமல் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.


இந்நிலையில் அங்கு குழுமிய பொதுமக்களும் இணைந்து தீயை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சுமார் ஒன்றரை மணி நேரமாக முயற்சித்தனர்.


இந் நிலையில் தீயை கட்டுப்படுத்துவதற்கு விமானப்படை, இராணுவத்தினர் மற்றும் பொலிசாரின் உதவியும் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


வவுனியாவில் தீப்பற்றி எரிந்த சிங்கர் காட்சியறை வவுனியா - ஹொரவப்பொத்தான வீதியில் அமைந்திருந்த சிங்கர் இலத்திரனியல் காட்சியறை இன்று காலை தீப்பரவலுக்கு உள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.காட்சியறையின் மேல் தளத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் தீயே இந்தக் காட்சியறை முழுமையாக எரிந்தமைக்கு காரணம் என கூறப்படுகின்றது.தீப்பரவல் ஏற்பட்டு சில நிமிடங்களில் மாநகர சபை தீயணைப்பு பிரிவு வருகை தந்து தீயை அணைப்பதற்கு முயற்சித்த போதிலும் அது கட்டுக்கடங்காமல் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.இந்நிலையில் அங்கு குழுமிய பொதுமக்களும் இணைந்து தீயை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சுமார் ஒன்றரை மணி நேரமாக முயற்சித்தனர்.இந் நிலையில் தீயை கட்டுப்படுத்துவதற்கு விமானப்படை, இராணுவத்தினர் மற்றும் பொலிசாரின் உதவியும் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement